என்னது இவங்க சச்சின் மற்றும் டிராவிட்க்கு சமமா ? இந்திய வீரர்களை கழுவி ஊற்றிய – முகமது யூசுப்

Yusuf
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன்,விரேந்தர் சேவாக், சௌரவ் கங்குலி, யுவ்ராஜ் சிங் என தலை சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்தனர். அவர்கள் இருந்த காலகட்டத்தில் டி20 போட்டிகள் மிகப் பெரும் பிரபலம் கிடையாது. இதனால் அவர்கள் நேர்த்தியான கிரிக்கெட் ஷாட்களை ஆடி ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் மகிழ்வித்தனர்.

dravid 2

- Advertisement -

தற்போது உள்ள காலகட்டம் அப்படி இல்லை. டி20 கிரிக்கெட் உருவாகி விட்டதால் வீரர்கள் வித்தியாசமான ஷாட்களை ஆடுகின்றனர். இதனால் பல முன்னாள் வீரர்களும் இதனை வித்தியாசமாக விமர்சித்து வருகின்றனர். அப்படி பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப் இந்தியாவின் முன்னாள் வீரர்களையும் தற்போதைய வீரர்களையும் பற்றி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த காலத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளை பார்த்தோமானால் மூன்று அல்லது நான்கு தரமான வீரர்கள் இருந்திருப்பார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாக், சௌரவ் கங்குலி, லட்சுமண், யுவ்ராஜ் சிங் போன்ற சிறப்பான வீரர்கள் இருந்தனர். இந்த 6 வீரர்களும் ஒரே அணியில் விளையாடியது ஆச்சரியமானது.

dravid

ஆனால் தற்போது உள்ள இந்திய அணிகள் அதுபோன்ற பேட்ஸ்மேன்கள் இல்லை. கிளாஸ்-ஆக ஆடும் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோர் உடன் எப்போதும் விராட்கோலி மற்றும் ரோகித் சர்மா போன்றவர்களை ஒப்பிட முடியாது என்று கூறியுள்ளார் முகமது யூசப். மேலும் சச்சின், டிராவிட் போன்றோர் விளையாடிய காலகட்டமும் அவர்கள் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களும் வேறு. தற்போது நவீன கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொள்ளும் விடயங்கள் வேறு மாதிரியானவை.

- Advertisement -

கிட்டத்தட்ட இது உண்மைதான் அவருடைய காலத்தில் மைதானங்களும், கிரிக்கெட் விதிமுறைகளும் வித்தியாசமாக இருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கிரிக்கெட் விதிமுறைகள் கிட்டத்தட்ட பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறி விட்டது குறிப்பிடத்தக்கது. அதனால் என்றும் சச்சின், டிராவிட் போன்ற லெஜண்ட்களை கோலி மற்றும் ரோஹித் ஆகியோருடன் ஒப்பிடுவது தவறு என்று முகமது யூசுப் கூறியுள்ளார்.

Rohith

கிட்டத்தட்ட இவரின் இந்த கருத்து சரியானது தான். ஏனெனில் தற்போது உள்ள கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவர்களில் பீல்டர்கள் நிறுத்தம், பந்துவீச்சு முறை ஆகியவை பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன் அப்படி கிடையாது சரியான ஷாட்டுகளை ஆடினால் மட்டுமே பவுண்டரிகள் கிடைக்கும். எனவே சச்சின், கங்குலி, டிராவிட், சேவாக், லட்சுமணன் மற்றும் யுவ்ராஜ் ஆகியோர் சிறந்த வீரர்கள் என்றே கூறவேண்டும்.

Advertisement