இந்த தலைமுறையின் சிறந்த (ஃபேப் ஃபோர்) 4 பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் – முகம்மது யூசப் வெளிப்படை

Yusuf
- Advertisement -

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஃபேப் போர் எனப்படும் சிறந்த பேட்ஸ்மேன்கள் உருவாவது வழக்கம். சென்ற பத்தாண்டுகளில் இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், வீரேந்தர் சேவாக் ஆகியோர் இருந்தனர். அதேபோல் உலக அளவிலும் அப்படிப்பட்ட 4 வீரர்கள் ஆடி வந்தனர்.

Laxman

- Advertisement -

தற்போதைய தலைமுறையை எடுத்துக்கொண்டால் இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் அந்த வரிசையில் வருகின்றனர். இவர்கள் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடி ஃபார்ம் அவுட் ஆகாமல் இருப்பவர்கள்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது யூசப் நான்கு வீரர்களில் புதிய ஒரு வீரரை ஜோ ரூட்டிற்கு பதில் சேர்த்துள்ளார். சமீபத்தில் ட்விட்டர் தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறியதாவது : ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், இந்தியாவின் விராட் கோலி, நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், பாகிஸ்தானின் பாபர் அசாம், ஆகிய நான்கு பேர் தான் தற்போதைய ஃபேப் போர் என்று பதிலளித்தார்.

இந்த நான்கு வீரர்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 70 சதங்கள் விளாசி அசத்தியுள்ளார். மற்ற மூன்று வீரர்களும் கோலிக்கு மிகவும் பின்தங்கியுள்ளனர், ஸ்டீவன் ஸ்மித் 35, வில்லியம்சன் 34, பாபர் அசாம் 16 இவ்வாறு இருக்கின்றது. இங்கிலாந்தின் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 7600 ரன்கள் விளாசியுள்ளார்.

- Advertisement -

ஆனாலும் சமீபகாலமாக இவர் சரியாக ஆடாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டியிலும் அவர் சொதப்பி வருவது இங்கிலாந்து ரசிகர்களுக்கு கவலை அளிக்கிறது. இதனால் பல கிரிக்கெட் விமர்சகர்கள் ஜோ ரூட்டை தவிர்த்துவிட்டு பாபர் அசாமை இந்த பட்டியலில் சேர்த்து வருகின்றனர்.

தற்போதைய கிரிக்கெட்டில் நிச்சயம் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தவிர்க்க முடியாத வீரராகவே உள்ளார். ஆனாலும் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருவதாலும் இந்த தேர்வினை செய்த யூசப் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதனாலும் இந்த பட்டியலில் பாபர் அசாம் இடம்பிடித்ததாக சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement