டிரா பண்ணலாம் நெனைக்கவே மாட்டோம். ஜெயிப்பது மட்டுமே ஒரே இலக்கு – இந்திய அணியின் இளம்வீரர் பேட்டி

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்களில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் இந்திய அணியானது இந்த ஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டியானது நாளை ஜூலை 1 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் துவங்கவுள்ளது.

indvseng

- Advertisement -

அதே வேளையில் இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான புதிய இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளதால் நாளைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கேப்டனாக இருந்த ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபமாக சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து தற்போது பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டிரா செய்வதை விட வெற்றி பெறுவது தான் எங்களுடைய ஒரே இலக்கு என்று இந்திய அணியின் இளம் வேகபந்து வீச்சாளரான முகம்மது சிராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Siraj

இந்திய அணி இந்த தொடரில் ஏற்கனவே இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிப்பது நமக்கு கூடுதல் பலம் தான். இருந்தாலும் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் டிரா செய்ய நினைக்க கூட மாட்டோம். இந்த ஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்று அந்த வெற்றியோடு தொடரை கைப்பற்ற வேண்டும் அதுவே எங்களது ஒரே இலக்காக உள்ளது என சிராஜ் கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அண்மை காலங்களாகவே அயல்நாட்டில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்முறை இங்கிலாந்து மண்ணிலும் நாங்கள் கோப்பையை கைப்பற்றுவோம். அதோடு இந்த போட்டியில் எனக்கான வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நான் நிச்சயம் இந்திய அணிக்காக என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியில் இணைந்த முதல்நாள் தோனியிடம் ஒரு பைக் கொடுத்தேன். என்ன செய்தார் தெரியுமா? – சி.எஸ்.கே ஓனர் பேட்டி

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருந்த ரோகித் சர்மாவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அவர் இந்த 5 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருப்பதால் அவருக்கு பதிலாக முதல்முறையாக இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செயல்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement