எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு தான். எனது அசத்தலான பந்துவீச்சுக்கு காரணம் – சிராஜ் நெகிழ்ச்சி

Siraj-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 39 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை மட்டுமே குவித்தது.

RCBvsKKR

- Advertisement -

துவக்க வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பின்னர் எந்த இடத்திலுமே கொல்கத்தா அணியால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதிகபட்சமாக மோர்கன் 30 ரன்களையும், லோகீ பெர்குசன் 19 ரன்களை குவித்தனர். பெங்களூரு அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி சுருண்டது என்றே கூறலாம்.

அதன் பின்னர் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா பெங்களூரு அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 85 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் படிக்கல் 25 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் குர்கீரத் சிங் 21 ரன்களும், விராட் கோலி 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணியின் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

rcb

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் முகமது சிராஜ் கூறுகையில் : இந்த போட்டியில் நான் சிறப்பாக பந்து வீசியது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் புது பந்தில் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்று வலைப்பயிற்சியில் அதிக பயிற்சி எடுத்துக்கொண்டேன். அதுமட்டுமின்றி எனக்கு புது பந்துக்கு பந்து வீச வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் இன்றைய போட்டியில் எனக்கான வாய்ப்பு கிடைத்தது.

அணியில் உள்ள வீரர்களின் ஒத்துழைப்பு மற்றும் எனது மனநிலை ஆகியவை அனைத்தும் இந்த போட்டியில் என்னை சிறப்பாக பந்து வீச வைத்தது. நாங்கள் அனைவரும் ஒவ்வொரு ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், அதிகம் பேசிக் கொள்கிறோம். அதனாலேயே என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது என்று சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement