- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வங்கதேச அணிக்கெதிரான இன்றைய போட்டியிலும் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடையாது – விவரம் இதோ

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் குரூப் சுற்று போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியானது 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.

அதனை தொடர்ந்து சூப்பர் 8 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியிருந்தது. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று ஜூன் 22-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகும் என்பதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் அமெரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்ததால் அவர் அணியில் சேர்க்கப்பட்டார் என்று தெரிகிறது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற்று வருவதால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளங்களில் கடந்த போட்டியில் இந்திய 3 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது.

இதையும் படிங்க : எல்லாரும் தப்பா புரிஞ்சுகிட்டோம்.. அவங்களை ஹீரோ பாத்த ரசிகர்கள் கம்பீரை மறந்துட்டாங்க.. அஸ்வின் பேட்டி

அதைப்போன்றே இன்றைய வங்கதேச அணிக்கெதிரான போட்டியிலும் இந்திய அணி அதே திட்டத்துடன் செல்லும் என்று தெரிகிறது. அந்த வகையில் இந்த போட்டியிலும் முகமது சிராஜ்-க்கு இடம் கிடைப்பது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -