எனக்கு எந்த பிரஷரும் இல்ல. நான் ரொம்ப ஈஸியா பவுலிங் பண்ணுவேன் – இந்திய வேகப்பந்து வீச்சாளர் உற்சாகம்

IND-3
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை முடித்த கையோடு இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரில் விளையாட உள்ளனர். அதற்காக ஆஸ்திரேலியா சென்றடைந்த வீரர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு வருகிற 27-ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி தனது பந்துவீச்சு குறித்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த சீசனில் ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி மொத்தம் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். ஐபிஎல் தொடரில் நான் விளையாடிய விதம் எனக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எந்தவித நெருக்கடியும் இன்றி என்னால் சிறப்பாக பந்து வீச முடியும் என்று நினைக்கிறன்.

shami 1

மேலும் என் மீது எந்த சுமையும் இல்லை. நல்ல நம்பிக்கையுடன் சரியான நிலையில் இருக்கிறேன். அதனால் இந்த நீண்ட சுற்றுப்பயணத்தில் என்னால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எளிதாக பந்து வீச முடியும் என நினைக்கிறேன். இந்த தொடரில் டெஸ்ட் போட்டிக்காக சிறப்பாக பயிற்சி எடுத்து வருகிறேன்.

Shami

எங்கள் அணியில் உள்ள அனைத்து பந்து வீச்சாளர்களும் 140 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீச முடியும். அதே போன்று மாற்று வேகப்பந்து வீச்சாளர்களும் கூட நல்ல வேகத்தில் பந்து வீச கூடியவர்கள்தான் எனவே இந்த தொடரில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என சமி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement