அவங்க 2 பேருக்கும் என்ன குறை? அவங்கள ஏன் ஸ்டான்ட் பை பிளேயர்ஸ்ஸா போட்டிருக்கீங்க – நெட்டிசன்கள் கேள்வி

shami
Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று பி.சி.சி.ஐ யின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இந்த உலகக் கோப்பை அணியில் பெரிய மாற்றம் ஏதும் நடக்குமா? என்கிற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே நிகழ்ந்துள்ளது என்றே கூறலாம்.

IND

ஏனெனில் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளனர். அதோடு அணியில் முக்கிய இரண்டு மாற்றங்களாக பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் மட்டுமே மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி உள்ளனர். அவர்களை தவிர்த்து வேறு எந்த பெரிய மாற்றமும் இந்திய அணியில் நிகழவில்லை.

- Advertisement -

இந்நிலையில் இன்று இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பு வெளியானதில் இருந்து சமூக வலைதளத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த அணி தேர்வின் மீது எப்பொழுதும் இல்லாத வகையில் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் அனுபவ வீரரான முகமது ஷமி மற்றும் டி20 பவர்பிளே ஸ்பெசலிஸ்ட் தீபக் சாகர் ஆகிய இருவரையும் ஸ்டான்ட் பை வீரர்களாக இந்திய அணி தேர்வு செய்துள்ளது மிகப்பெரிய விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

Shami

ஏனெனில் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மிகச்சிறப்பாக பந்துவீசி போட்டியின் துவக்கத்திலேயே விக்கெட் எடுக்கக் கூடியவர். இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றபோது அந்த அணிக்கு முக்கிய பந்துவீச்சாளராக மிக அற்புதமாக பந்து வீசி இருந்தார்.

- Advertisement -

அதேபோன்று டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்து அசத்தலாக விக்கெட்டினை எடுக்கும் தீபக் சாகரும் மிக முக்கியமான வீரராக இருந்து வருகிறார். ஆனால் இப்படி இவர்கள் இருவரையும் அணியில் ஸ்டான்ட் பை வீரர்களாக எடுத்துவிட்டு முதன்மை அணியில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காததால் ரசிகர்கள் சமூக வலைதளத்தின் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க : அடித்து ஆடும் அவருக்கு வாய்ப்பு குடுக்காம. ஷார்ட் பால்ல அவுட் ஆகும் இவருக்கு போய் சேன்ஸ்ஸா? – ரசிகர்கள் கேள்வி

அதே வேளையில் பவுலர்களைத் தவிர்த்து பேட்ஸ்மேன்கள் பட்டியலிலும் சஞ்சு சாம்சனை ஏன் சேர்க்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். டி20 கிரிக்கெட்டில் எப்பொழுதுமே விக்கெட்டுகள் சரிந்தாலும் மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதும் தற்போது அதிகளவில் கேள்விகளை எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement