அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்குபெறுவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றுவந்தன.கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றின் இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 46.5 ஓவர்களில் 204 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர் 205ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 40.4 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் அபாரமாக ஆடி அசத்திய சாஹத் 84ரன்கள் எடுத்திருந்தபோது மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் வீசிய பந்தில் தோனி வழக்கமாக ஆடிடும் ஹெலிகாப்டர் ஷாட்டை இமிடேட் செய்து ஆடினார்.சாஹத் இந்த போட்டியில் அபாரமாக விளையாடி 93 பந்துகளில் 84 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.
Never change @MShahzad077. Never change.pic.twitter.com/2wn3wkp6f6
— Barny Read (@BarnabyRead) March 25, 2018
அந்த காட்சி தற்போது சமூகவளைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.முன்னதாக உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் தொடர்ந்து முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து பின்னர் போராடி இறுதிப்போட்டிக்கு நுழைந்து வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.