மைதானத்தில் நின்று திமிராக புகைபிடித்த வீரர் – தண்டனை அளிக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தல்

Shahzad
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடத்தப்படுவது போன்று உலகம் முழுவதும் பல டி20 தொடர்கள் பிரபலமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சீசன் தற்போது வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடரில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் ஒவ்வொரு அணிக்காக விளையாடி வருகின்றனர்.

bpl

- Advertisement -

அந்த வகையில் கொமிலா விக்டோரியன்ஸ் மற்றும் மினிஸ்டர் குரூப் டாக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான ஒரு லீக் போட்டி நடைபெற்றபோது கிரிக்கெட் வீரர் ஒருவர் புகை பிடித்த புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி விக்டோரியன்ஸ் மற்றும் டாக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக நடைபெறாமல் கைவிடப்பட்டது.

அப்போது மைதானத்தின் நடுவில் இருந்த சில வீரர்களுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தான் அணியின் சீனியர் வீரரான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஹமது ஷஹாத் மைதானத்தின் நடுவில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் திமிராக புகைப்பிடித்தார். இதனை கண்ட சீனியர் வீரரான தமிம் இஃபால் அவரை டிரெஸ்சிங் ரூமிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனாலும் அவர் புகை பிடித்த சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கடும் கண்டனங்கள் எழுந்தன.

shahzad 1

மேலும் இதனைக்கண்ட பயிற்சியாளர் ரகுமானும் முஹமது ஷஹாத்தை எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போட்டியை நடத்தும் அதிகாரிகளும் முஹமது ஷஹாத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே அவருக்கு முறைப்படி உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று அனைவரது மத்தியிலும் இருந்து கண்டனங்கள் எழுந்ததால் அவருக்கு தற்போது ஒழுங்குமுறை மீறல் அடிப்படையில் ஒரு தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு முறையான தண்டனையும் வழங்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

தன் மீதுள்ள இந்த குற்றச்சாட்டை முஹமது ஷஹாத் ஒப்புக் கொண்டதாகவும் வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எது எப்படி இருப்பினும் ரசிகர்கள் நேரில் பார்க்கும் இப்படிப்பட்ட ஒரு போட்டிக்கு நடுவே மைதானத்தில் நின்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் புகைப்பது மிகப்பெரிய தவறு என்று என்றும் அவருக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது குரல்களை எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க : நானும் இந்தியாவுக்காக விளையாடியவன் – தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி பதில்

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக விளையாடி வரும் அவர் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 120 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 53 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்காக கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 84 ஒருநாள் போட்டிகள், 70 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement