2021இல் இந்தியாவை தெறிக்கவிட்டு பாகிஸ்தான் தோற்கடிக்க ரமீஸ் ராஜா தான் காரணம்.. ரிஸ்வான் பேட்டி

Mohammad Rizwan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஜூன் ஒன்பதாம் தேதி மோதுகின்றன. கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் அந்தப் போட்டிக்கு வழக்கம் போல உச்சகட்ட எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இவ்விரு அணிகளை பொறுத்த வரை இந்தியா வலுவான அணியாகவே கருதப்படுகிறது.

குறிப்பாக ஐசிசி உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி கண்டுள்ளது. அதே போல டி20 உலகக் கோப்பையிலும் 2021 துபாய் தோல்வியை தவிர்த்து எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. எனவே உலகக்கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பதே பாகிஸ்தான் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

- Advertisement -

ரமீஸ் ராஜா உத்வேகம்:
இந்நிலையில் 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவதற்கு அப்போதைய பாகிஸ்தான் வாரியத்தின் தலைவராக இருந்த ரமீஸ் ராஜா சொன்ன வார்த்தைகள் தான் காரணம் என்று முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அதற்கு முன் நாங்கள் இந்தியாவை உலகக் கோப்பையில் தோற்கடித்ததில்லை”

“அப்போது எங்களை சந்தித்த ரமீஸ் ராஜா நீங்கள் இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்று சொன்னார். அந்த உலகக் கோப்பைக்கு முன்பாகவே பாகிஸ்தான் வாரிய தலைவராக எங்களை சந்தித்த அவர் அந்த எண்ணத்தை உருவாக்கத் துவங்கினார். உலகக் கோப்பை நெருங்கியதும் நீங்கள் கோப்பையை வெல்கிறீர்களோ இல்லையோ ஆனால் இந்தியாவிடம் தோற்காதீர்கள் என்று அவர் எங்களிடம் சொன்னார்”

- Advertisement -

“மேலும் அழுத்தத்திற்கு கீழே வராதீர்கள் அப்படி வந்தால் அது உங்களை அழுத்தத்திற்கு உள்ளே தள்ளி விடும் என்று சொன்னார். இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் எப்போதுமே அழுத்தத்துடன் வரும். உலகக் கோப்பையின் மற்ற போட்டிகளை அனைவரும் பார்க்க விரும்புவதில்லை. ஆனால் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த போட்டியை அனைவரும் உட்கார்ந்து பார்ப்பார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: மறக்க முடியாத 120 ரன்ஸ்.. தோனியை காப்பி அடித்து தல ரசிகனாக ஓய்வை அறிவித்த கேதர் ஜாதவ்

இந்த நிலையில் சமீபத்தில் அயர்லாந்து, இளம் நியூசிலாந்து அணிகளிடம் பாகிஸ்தான் தடுமாற்றமாக விளையாடி சில தோல்விகளை சந்தித்தது. அத்துடன் இம்முறையும் அந்த அணிக்கு மீண்டும் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் இம்முறையும் இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் வெற்றி பெறுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் 2021 போல இம்முறையும் வெற்றி பெறுவோம் என்று முகமது ரிஸ்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement