INDvsPAK : விதிமுறையை மீறி நடந்துகொண்ட பாகிஸ்தான் வீரர் – நடவடிக்கை எடுக்குமா ஐ.சி.சி?

Mohammad-Nawaz
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தினையை அளித்தது என்றே கூறலாம். ஏனெனில் இந்த போட்டியின் கடைசி ஓவரின் கடைசி பந்து வரை போட்டி மிக சுவாரசியமாக அமைந்தது. கடைசி பந்து வரை வெற்றி யாருக்கு சொந்தம் என்று உறுதியாகாத வேலையில் அஷ்வின் பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Ashwin-and-Kohli

- Advertisement -

இந்த போட்டியின் கடைசி ஓவரின் போது வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்கிற வேளையில் வேறு வழியின்றி சுழற்பந்து வீச்சாளரான முகம்மது நவாஸ் பவுலிங் செய்ய வந்தார். அப்போது அவரது அந்த ஓவரின் முதல் பந்தில் ஹார்டிக் பாண்டியா கேட்ச் ஆகி ஆட்டமிழந்து வெளியேறியதும் அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் மட்டுமே அடித்தார். இதன் காரணமாக நான்கு பந்துகளில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில் 19-வது ஓவரின் மூன்றாவது பந்தில் முகமது நவாஸ் நோபால் வீசியதோடு சிக்ஸரையும் விட்டுக் கொடுத்தார்.

பின்னர் ஃப்ரீ ஹிட் பந்தில் விராட் கோலி போல்டாகியும் மூன்று ரன்கள் ஓடியதால் கடைசி இரண்டு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இருந்தது. பின்னர் ஐந்தாவது பதில் தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் மூலம் ஆட்டம் இழக்க கடைசி பந்தில் இரண்டு ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இருந்தது. அப்போது களமிறங்கிய அஸ்வின் ஒரு பந்தை வொயிடு வாங்கியும் அடுத்த பந்தை பவுண்டரிக்கு அடித்தும் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்திருந்தார்.

Nawaz 1

இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் முகமது நவாஸ் விராட் கோலிக்கு அந்த நோபால் பந்தை வீசுவதற்கு முன்னால் எச்சில் தடவி பந்தினை பளபளப்பாக்கியது தற்போது புகைப்படம் மூலமாக உறுதியாகி உள்ளது. ஐசிசி ஏற்கனவே கொரோனா விதிமுறை கட்டுப்பாடுகளுக்கு பின்னர் வெளியிட்டிருந்த விதிமுறைகளில் பந்தில் எச்சில் தடவுவது தடை செய்யப்பட்ட்டுள்ளதாக அறிவித்திருந்தது.

- Advertisement -

இப்படி பந்தில் எச்சில் தடவக்கூடாது என்று தடை விதித்துள்ள வேளையில் தற்போது பந்தை பளபளப்பாக்க அவர் எச்சில் தடவி உள்ளது இந்த புகைப்படத்தின் மூலம் உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தடை செய்யப்பட்ட விதியினை மீறி பந்தில் எச்சில் தடவியது தவறு என்றும் அதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி தங்களது வேண்டுகோள்களை முன்வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : டிகே’வுக்கு சாபமிட்டேன், கங்காவாக இருந்த கோலி சந்திரமுகியாக மாறுனாரு – வின்னிங் ஷாட் அடித்தது பற்றி மனம் திறக்கும் அஷ்வின்

ஆனால் முகமது நவாஸ் எச்சிலை தொட்டு பந்தை பளபளப்பாக்கியது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. அதே வேளையில் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியாத்தையும் டேக் செய்து வருகின்றனர்.

Advertisement