36 வயது முகமது நபிக்கு இவ்ளோ பெரிய மகனா ? அவரும் பவர் ஹிட்டர் தானாம் – ஆச்சரிய தகவல் இதோ

Nabi
- Advertisement -

ஷார்ஜாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில், தன்னுடைய அதிரடியான பேட்டிங் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்துள்ளார், ஆப்கானிஸ்தான் அணியின் வீரரான முஹம்மது நபியின் மகன் அஸ்ஸன் கான். 16 வயதான அஸ்ஸன் கான், அந்த போட்டியில் 30 பந்துகளில் 71 ரன்களை அடித்து, தனது தந்தையான முஹம்மது நபியின் பேட்டிங் சாயலை அப்படியே பிரதிபலித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ரஷீத் கானும், முஹம்மது நபியும் தான். 36 வயதாகும் முஹம்மது நபி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், இன்னும் அந்த அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறார். தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ஆப்கானிஸ்தான் அணியை பலமுறை வெற்றிபெற வைத்திருக்கிறார் முஹம்மது நபி.

hassan 2

- Advertisement -

தற்போது அவரின் மகனும், தனது தந்தையைப் போலவே ஒரு பவர் ஹிட்டராக உருவெடுத்துள்ளார். புஹாதிர் லெவன் அணிக்காக ஷார்ஜாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில், எதிரணி வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்த அஸ்ஸன் கான், அப்போட்டியில் 30 பந்துகளில் 71 ரன்கள் குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் ஏழு சிக்ஸர்கள் அடித்த அஸ்ஸன் கான் பேட்டியளிக்கும்போது,

எனக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் வருவதற்கு காரணமே என் தந்தை தான் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், என் தந்தை விளையாடுவதை நான் டிவியில் பார்த்தபோது, அவர் எங்களது நாட்டிற்காக விளையாடுகிறார் என்பதை நினைத்து பெருமைப்பட்டேன். அப்போது நானும் அவரைப்போல் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாட வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். இப்போது அதை நோக்கித்தான் என் பயணம் சென்றுகொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

hassan 1

நான் இங்கு ஷார்ஜாவில் தான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருக்கிறேன். ஆனாலும் இங்கிருக்கும் பயிற்சியாளர்கள் சொல்வதை எல்லாம் நான் கேட்க மாட்டேன். அவர்கள் ஏதாவது சொன்னால், அதைப் பற்றி என் தந்தையுடன் ஆலோசனை செய்துவேன், அது சரியாக இருக்குமென்று என் தந்தை சொன்னால்தான், அவர்கள் கூறியபடி நான் விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். அஸ்ஸான் அலிக்கு தற்போது 16 வயது தான் ஆகிறது,

hassan

ஒருவேளை அவர் தன்னுடைய திறமையை மேலும் நிருபித்தால், அவருக்கு ஆப்கானிஸ்தான் அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும். அப்படி அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் கிரிக்கெட் வரலாற்றிலேயே சர்வதேச போட்டிகளில், ஒரே அணியில் அப்பா மகன் இணைந்து விளையாடிய முதல் தருணமாக அது அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதற்கு முன்பாக முதல் தர கிரிக்கெட்டில் அப்பா மகன் இணைந்து ஒரே அணிக்காக விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement