தோல்வியை தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறிய முகமது நபி – அதற்கு அவர் சொன்ன காரணம்

nabi
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட அரையிறுதிக்கு செல்லும் அணிகள் எவை என்பது இன்னும் ஓரிரு தினங்களில் உறுதியாக உள்ள வேளையில் இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி இருந்த அணிகள் ஒவ்வொரு அணிகளாக இந்த தொடரில் இருந்து வெளியேறி வருகின்றன. அந்த வகையில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற பெரிய அணிகள் கூட தகுதி சுற்று போட்டிகளில் விளையாடிய பின்னரே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.

Rashid Khan David Warner AUs vs AFG

- Advertisement -

ஆனால் ஆப்கானிஸ்தான் அணியானது நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. இந்த தொடரில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே போன்ற அணிகள் கூட பெரிய பெரிய அணிகளை வீழ்த்தி ஆச்சரியப்படுத்திய வேளையில் ஆப்கானிஸ்தான் அணி நிச்சயம் இந்த தொடரில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வேளையில் ஆப்கானிஸ்தான் அணியால் எந்த ஒரு பெரிய அணியையும் வீழ்த்த முடியாமல் இந்த டி20 தொடரில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறி இருக்கிறது. கடைசியாக நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி இறுதிவரை போராடி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.

Nabi-2

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பிறகு நேற்று வருத்தத்துடன் பேசிய முகமது நபி கேப்டன் பதிவியிலிருந்தும் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : எங்களுடைய இந்த உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது. இப்படி நாங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த தொடரின் முடிவுகள் உங்களை எப்படி அதிர்ச்சி அடைய வைத்துள்ளதோ அதேபோன்றுதான் எங்கள் அனைவருக்கும் இருக்கிறது.

- Advertisement -

கடந்த ஒரு ஆண்டாகவே உலகக் கோப்பை தொடருக்காக அணியை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என கேப்டனாக நான் விரும்பினேனோ அதன்படி அணி தயார்படுத்தப்படவில்லை. அணியின் நிர்வாகம், தேர்வு குழு மற்றும் கேப்டன் ஆகிய மூவரும் ஒரே பாதையில் பயணிக்க வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியும். ஆனால் என்னுடைய விருப்பப்படி எதுவும் நடக்கவில்லை.

இதையும் படிங்க : 100% அது போலியான பீல்டிங் தான், விராட் கோலியை விமர்சிக்கும் முன்னாள் இந்திய வீரர் – கலாய்க்கும் ரசிகர்கள்

தேர்வு குழு மற்றும் அணியின் நிர்வாகம் என இரண்டுமே எனது முடிவுகளுக்கு மாறாக இருந்தது என்று முஹமது நபி கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஒரு கேப்டனாக உரிய மரியாதையுடன் சரியான நேரத்தில் நான் இந்த முடிவினை எடுத்துள்ளேன். அணிக்கு தேவைப்படும் ஒரு வீரராக இனி தொடர்ந்து விளையாடுவேன் என்று முஹமது நபி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement