100% அது போலியான பீல்டிங் தான், விராட் கோலியை விமர்சிக்கும் முன்னாள் இந்திய வீரர் – கலாய்க்கும் ரசிகர்கள்

Fake Fielding
Advertisement

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. குறிப்பாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான தன்னுடைய கடைசி போட்டியில் வென்றால் செமி பைனலுக்கு தகுதி பெற்ற விடலாம் என்ற நிலைமைக்கு போராடி வந்துள்ள இந்தியா வங்கதேசத்துக்கு எதிராக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய 4வது போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி திரில் வெற்றி பெற்றது. இருப்பினும் அப்போட்டியில் நிகழ்ந்த சர்ச்சைகள் நிறைய விவாதங்களை எழுப்பியுள்ளது.

Virat Kohli vs Shakib Al Hasan IND vs BAN

முதலில் 64* (44) ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி 16வது ஓவரில் பவுன்ஸ் ஆகி வந்த கடைசி பந்தை அடித்து விட்டு சிங்கிள் எடுத்துக் கொண்டே நோ-பால் கேட்டார். அதே ஓவரில் ஏற்கனவே ஒரு பந்து பவுன்சராக வீசப்பட்டிருந்ததால் நடுவரும் நோ-பால் கொடுத்தார். ஆனால் விராட் கோலி கேட்டார் என்பதற்காக வேண்டுமென்றே நோ-பால் கொடுக்காதீர்கள் என்று வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன் நடுவர்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அத்துடன் 7 ஓவரில் 66/0 என்ற நிலையில் இருந்த அந்த அணி மழை வந்தபோது 17 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தது.

- Advertisement -

போலியான பீல்டிங்:
ஆனால் மழை நின்றபின் அதிகப்படியான ஈரப்பதம் இருந்தும் இந்தியா வெல்ல வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக நடுவர்கள் போட்டியை துவங்கியதாக ஷாகிப் அல் ஹசன் மீண்டும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதை விட வங்கதேசம் பேட்டிங் செய்த போது 60 (27) ரன்கள் குவித்து மிரட்டிய லிட்டன் தாஸ் ஒரு பந்தில் 2 ரன்கள் எடுக்கும் போது விராட் கோலி போலியான பீல்டிங் செய்தார் என்றும் அதை நடுவர்கள் வேண்டுமென்றே கவனிக்காமல் விட்டதால் தங்களுக்கு 5 ரன்கள் பெனால்டி கிடைக்காமல் போனதால் வெற்றியும் பறிபோனதாக போட்டி முடிந்த பின் நுருள் ஹசன் பரபரப்பான குற்றம் சாட்டினார்.

Virat Kohli

இந்நிலையில் அது 100% போலியான பீல்டிங் தான் என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா அந்த சமயத்தில் நடுவர்கள் கண்டுகொள்ளாததால் இந்தியா தப்பித்து விட்டதாக கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் அவர் பந்தை எறிய முயற்சித்த விதத்தில் அது 100% போலியான பீல்டிங் தான். ஒருவேளை அதை நடுவர்கள் பார்த்திருந்தால் நமக்கு 5 ரன்கள் தண்டனையாக கிடைத்திருக்கும். ஆனால் நாம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தான் வென்றோம்”

- Advertisement -

“எனவே நாம் தப்பித்து விட்டோம். ஆனால் அடுத்த முறை இது போல் யாராவது செய்தால் நடுவர்கள் உன்னிப்பாக கவனித்து தண்டனை கொடுக்க வேண்டும். மேலும் அந்த சமயத்தில் அது கவனிக்கப்படாமல் சென்று விட்டதால் இனி ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் முதலில் அதை அம்பயர்கள் பார்த்து முடிவெடுக்க வேண்டும் என்று அடிப்படை விதிமுறை சொல்கிறது. ஒருவேளை 3வது நடுவர் அதை பார்த்திருந்தால் கூட ஏதாவது முடிவெடுத்திருக்கலாம். குறிப்பாக ஒரு பீல்டர் பேட்ஸ்மேனை திசை திருப்பும் வகையில் செயல்பட்டதாக நடுவர் நினைத்தால் அதற்கு 5 ரன்கள் தண்டனையாக வழங்கலாம்”

Chopra

- Advertisement -

“ஒருவேளை அது கொடுக்கப்பட்டிருந்தால் வங்கதேச வீரர்கள் எடுத்த 2 ரன்களுடன் சேர்த்து 7 ரன்கள் வந்திருக்கும். எனவே போலியான பீல்டிங் மிகவும் அபத்தமானது” என்று கூறினார். ஆனால் ஒரு பேட்ஸ்மேன் ரன் எடுக்கும் போது அவரது பார்வையை திசை திருப்பும் வகையில் போலியாக ஃபீல்டிங் செய்தால் மட்டுமே 5 ரன்கள் தண்டனையாக வழங்க வேண்டும் என்று விதிமுறை சொல்வதாக தெரிவிக்கும் ரசிகர்கள் அந்த தருணத்தில் 2 பேட்ஸ்மேன்களுமே விராட் கோலியை பார்க்காமல் தங்களது திசையை நோக்கி சென்றதாக கூறுகிறார்கள்.

அதனால் அது போலியான ஃபீல்டிங் இல்லை என்பதால் தான் நடுவர்களும் பெனால்டி வழங்கவில்லை என்று தெரிவிக்கும் ரசிகர்கள் இப்படி கிரிக்கெட் விதிமுறைகளைப் பற்றி தெரியாமல் பேசுவது ஆகாஷ் சோப்ராவுக்கு ஒன்றும் புதிதல்ல என்று சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.

Advertisement