ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி மாரடைப்பால் உயிரிழப்பு. என்னப்பா சொல்றீங்க – விவரம் இதோ

Nabi
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன முகமது நபி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக சில மீடியா செய்திகளை வெளியிட்டது. சமூக வலைதளத்திலும் இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவியது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முகமது நபிக்கு தங்களது இரங்கலை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த தகவலை மறுத்த முகமது நபி சில மீடியா நான் உயிரிழந்து விட்டதாக தவறான செய்திகளை பரப்பி உள்ளனர். ஆனால் அது எல்லாம் பொய் நான் கடவுளின் ஆசீர்வாதத்துடன் நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று ட்விட் செய்துள்ளார். அதோடு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் நபி கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் சில புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு அவர் ரசிகர்களுக்கு அவர் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளது.

ஆப்கான் அணியின் முன்னணி வீரரான இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி கிட்டதட்ட பத்து ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இதுவரை 121 ஒருநாள் போட்டிகளிலும், 72 டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இதுவரை விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement