இந்திய அணியில் எனக்கு பிடித்த வீரர் என்பது மட்டுமின்றி அவர் ஒரு நல்ல மனிதர் – நபி புகழாரம்

Nabi
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் இதுவரை பங்கேற்கவில்லை. மேலும் பிசிசிஐ வெளியிட்ட வீரர்களின் ஒப்பந்த பட்டியலிருந்து டோனியின் பெயர் நீக்கப்பட்டதால் அவர் இனி கிரிக்கெட்டிற்கு திரும்ப வாய்ப்பில்லை என்று பலரும் கூறி வருகின்றனர்.

Dhoni

- Advertisement -

அதுமட்டுமின்றி அவர் விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்றும் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவதை பார்க்க ஆவலாக காத்து இருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அவர்களது அந்த கனவும் இப்போது தள்ளிப் போயுள்ளது.

இந்நிலையில் தற்போது தோனி குறித்த கருத்துகளை பல கிரிக்கெட் வீரர்களும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் உலகில் உள்ள அனைத்து வீரர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் வாயிலாக கொடுத்து வருகின்றனர்.

Nabi

அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் முன்னாள் கேப்டன் முகமது நபி “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தோனி குறித்த சில விடயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தோனி ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன் மேலும் அவர் எப்போதும் அமைதியாக இருக்கும் நபர்.

- Advertisement -

அதைவிட மிக முக்கியமான விடயம் யாதெனில் அவர் ஒரு நல்ல மனிதர். தோனியின் அறைக் கதவுகள் 24 மணி நேரமும் வாரத்தின் ஏழு நாட்களும் எப்போதும் திறந்திருக்கும். அவரிடம் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். தேநீர் பருகிய படியே உரையாடலாம். அந்த அளவிற்கு பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர்.

Nabi 1

அவரை நான் இரண்டு அல்லது மூன்று முறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். உண்மையிலேயே இந்திய அணியில் மிகச்சிறந்த மனிதர் என நெகிழ்ச்சியுடன் தோனி குறித்து அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement