இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் வெற்றிகளுக்கு முதுகெலும்பாக இருந்து வருகிறார்கள். ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் என அடுத்தடுத்து வெற்றிகளை இந்திய அணி பெற்ற வேளையில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர்கள் இருவருமே ஒன்றாக ஓய்வை அறிவித்து விட்டார்கள்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு அழைப்பு விடுக்கனும் : முகமது கைப்
அதன் காரணமாக தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர்கள் இருவரும் விளையாடி வருகிறார்கள். எதிர்வரும் 2027 உலக கோப்பை தொடரில் விளையாடி விட்டு அந்த கோப்பையையும் கைப்பற்றி விட்டு சாம்பியனாக ஓய்வுபெற வேண்டி அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள்.
ஆனால் இந்திய அணியின் நிர்வாகம் அவர்கள் இருவரையும் ஓய்வுக்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்க தொடர் முடிவடையும் போது அவர்களின் எதிர்காலம் குறித்து பேசி ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தற்போதும் மிகச் சிறப்பான ஃபார்மில் விளையாடி வரும் வேளையில் அவர்களை ஏன் பரிசோதிக்க விரும்புகிறார்கள்? என புரியவில்லை என்று பிசிசிஐ-யை விமர்சித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருமே தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணியின் நிர்வாகம் கொஞ்சம் புத்திசாலித்தனமாக மாறி அவர்கள் இருவரையும் மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு அழைக்க விரும்புகிறேன். அவர்கள் இருவருமே அதனை வேண்டாம் என மறுத்தாலும் ஒரு கோரிக்கையாக அவர்களிடம் இந்த வேண்டுகோளை முன்வைக்க வேண்டும்.
இதையும் படிங்க : விராட் கோலி எப்போதுமே ரெடியா இருக்காரு.. என்ன செய்யனுன்னு அவருக்கு தெரியும் – டேல் ஸ்டெயின் பேட்டி
தற்போது சிறப்பாக விளையாடி வரும் அவர்கள் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். மூத்த வீரர்கள் அணியில் இருக்கும்போது அது நிச்சயம் நமது அணிக்கு பலம் தான் என்றும் முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.



