விராட் கோலி எப்போதுமே ரெடியா இருக்காரு.. என்ன செய்யனுன்னு அவருக்கு தெரியும் – டேல் ஸ்டெயின் பேட்டி

Steyn and Kohli
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் தொடர்ச்சியாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அதன் காரணமாக அவர் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான கௌதம் கம்பீர் மற்றும் அவரை சார்ந்த ஊழியர்கள் அவரை ஓய்வை நோக்கி அழுத்தம் கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விராட் கோலி ரெடியா இருக்காரு : டேல் ஸ்டெயின்

ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி விளையாடி வரும் அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரின் மூன்றாவது போட்டியில் அரைசதம் கடந்து ஆட்டம் இழக்காமல் இருந்த அவர் நேற்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் 135 ரன்கள் குவித்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இதன் காரணமாக விராட் கோலி தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என்கிற ஆதரவு அனைவரது மத்தியிலும் குவிந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக விராட் கோலியை தான் தனியாக சந்தித்ததாகவும் அப்போது அவர் என்ன கூறினார்? என்பது குறித்து தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான டேல் ஸ்டெயின் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் விராட் கோலியை நேற்று இரவு உணவுக்கு முன்பாக நேரில் சந்தித்திருந்தேன். அப்போது அவரிடம் நீங்கள் தொடர்ந்து என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டேன். அப்போது அவர் தான் ஒரு வடிவ கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருவதாகவும் தற்போது லண்டனில் வசித்து வருவதாகவும் கூறினார்.

- Advertisement -

அங்கு அவருக்கு சர்ரே அகாடமியில் நல்ல பயிற்சி வசதிகள் இருக்கிறது. அதோடு தனிப்பட்ட முறையில் அவர் பயிற்சியாளரை வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். எப்பொழுதுமே விராட் கோலி இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாட தயாராக இருக்கிறார்.

இதையும் படிங்க : விராட் கோலியிடம் இருக்கும் இந்த திறமைகள் எல்லாம் வேறலெவல்.. அவர் ப்ரூப் பண்ண தேவையில்லை – தினேஷ் கார்த்திக்

தற்போதும் மனதளவிலும், உடலளவிலும் அவர் வலிமையாக இருக்கிறார். எனவே அவருக்கு எப்படி ரன்கள் எடுக்க வேண்டும் என்று தெரியும். அதனால் அவரது ஆட்டம் குறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம் எனவும் டேல் ஸ்டெயின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement