இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்திய அணித்தேர்வின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக திறமையான வீரர்களை தேர்வு செய்யாமல் ஐபிஎல் தொடரின் அடிப்படையிலேயே வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது பல்வேறு தரப்பிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது. அதனால் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு துரோகம் இழைக்கப்டுவதாகவும் சில கருத்துகள் நிலவி வருகின்றன.
சாய் சுதர்சனை தாண்டி இவருக்கு வாய்ப்பு குடுங்க : முகமது கைப் வேண்டுகோள்
மேலும் எதிர்வரும் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மூன்றாவது இடத்திற்கு யார் விளையாடப்போவது? என்பது குறித்த பல்வேறு கேள்விகள் இருக்கும் வேளையில் பலரும் அந்த இடத்தில் சாய் சுதர்சனை விளையாட வைக்கலாம், கருண் நாயரை விளையாட வைக்கலாம் என தங்களது கருத்துக்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் சாய் சுதர்ஷனை தாண்டி இந்திய அணியின் மூன்றாம் இடத்திற்கு அபிமன்யு ஈஸ்வரனை விளையாட வைக்க வேண்டும் என்று தனது கருத்தினை சமூக வலைதள பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : என்னை பொருத்தவரை சாய் சுதர்சனுக்கு முன்பாக அபிமன்யு ஈஸ்வரனை பிளேயிங் லெவனில் விளையாட வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் அந்த இடத்திற்கு தகுதியான ஒரு வீரர்.
முதல்தர போட்டிகளில் கிட்டத்தட்ட 8,000 ரன்களையும், 27 சதங்களையும் அடித்திருக்கும் அவரது திறனை நாம் மதிக்க வேண்டும். அவருக்கு தேசிய அணியில் வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே அது நியாயமாக இருக்கும்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மா, விராட் கோலி போனா என்ன? அதனால பிரச்சனை எதும் இல்ல – இர்பான் பதான் கருத்து
அதேபோன்று இந்திய ஏ அணி சார்பாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கானை முதன்மை அணியில் தேர்வு செய்யாததும் தேர்வுக்குழுவினர் செய்த தவறு என்று நினைக்கிறேன். இது போன்ற தவறான முடிவுகளை தேர்வுக்குழு எடுத்துள்ளதாக முகமது கைஃப் குறிப்பிட்டுள்ளார்.



