இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் கடந்த மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டனர். இதன் காரணமாக மூத்த வீரர்கள் இருவர் இன்றி சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த முடிவு இந்திய அணியை பாதிக்காது : முகமது கைப்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூன் 20-ஆம் தேதி நாளை லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியானது தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகிறது.
நாளை துவங்க இருக்கும் இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருசேர ஓய்வை அறிவித்தது இந்திய டெஸ்ட் அணிக்கு பாதகம் என்று பலரும் பேசி வருகின்றனர். ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் அவர்கள் இருவரும் தற்போது டெஸ்ட் அணியிலிருந்து வெளியேறியது இந்திய அணியை எந்த விதத்திலும் பாதிக்காது என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : எல்லோருமே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதை பற்றியே பேசுகின்றனர். ஆனால் என்னை பொருத்தவரை அவர்கள் இருவரும் ஓய்வு பெற்றது இந்திய அணியை எவ்விதத்திலும் பாதிக்காது. ஏனெனில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்கள் இருவருமே அவர்களது தரத்திற்கு இணையாக விளையாடவில்லை.
அவர்கள் இருவருமே மிகப்பெரிய வீரர்கள் தான் அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஆனால் கடைசி ஒன்றரை ஆண்டுகளாக அவர்கள் பேட்டிங்கில் பெரியளவு தடுமாற்றத்தை கண்டு வந்தனர். எனவே அவர்களது இடத்தில் இனி இளம் வீரர்கள் விளையாடும் போது இந்திய அணிக்கு பலம் தான். அதேபோன்று என்னை பொறுத்தவரை இந்திய அணியின் மூன்றாம் இடத்திற்கு பேட்டிங் செய்ய கருண் நாயர் சரியான தேர்வாக இருப்பார் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் அணியின் 3 ஆம் இடத்தில் விளையாட அவர்தான் சரியான ஆள் – தினேஷ் கார்த்திக் கருத்து
ஏனெனில் கருண் நாயர் சர்வதேச போட்டியில் ஏற்கனவே விளையாடியது மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளிலும் அதிக அனுபவம் உடையவர். எனவே சாய் சதர்சனை கணக்கில் கொள்ளாமல் கருண் நாயருக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.



