உம்ரான் மாலிக்கிற்கு அறிமுக வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு இவரே காரணம் – முகமது கைப் பேட்டி

Kaif
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் தனது மின்னல் வேக பவுலிங் மூலம் சர்வதேச பேட்ஸ்மேன்களை திணறடித்து பல விக்கெட்டுகளை அள்ளிய உம்ரான் மாலிக்கிற்கு இந்திய அணியில் விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதன்மை வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் உம்ரான் மாலிக்கிற்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. என்னதான் இந்திய அணியில் அவரிடம் பிடித்திருந்தாலும் ஆடும் பிளேயிங் லெவனில் அவருக்கு ஒரு போட்டியில் கூட அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Umran Malik Pace

சர்வதேச கிரிக்கெட்டில் தனது வேகத்தால் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவார் என்று அனைவரும் கூறிவரும் உம்ரான் மாலிக்கிற்கு இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட அறிமுக வாய்ப்பு கொடுக்கப்படாதது சற்று வருத்தத்தை அளித்தாலும் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் உம்ரான் மாலிக்கிற்கு ஏன் இந்திய அணியில் அறிமுக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்தும் அவருக்கு வாய்ப்பு வழங்காததற்கு ராகுல் டிராவிட் தான் காரணம் என்பது குறித்தும் அவர் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : உம்ரான் மாலிக் இந்திய அணிக்காக ஒருநாள் கண்டிப்பாக விளையாடுவார், அந்த நாளை நான் எதிர்நோக்கி வருகிறேன். அதே வேளையில் அவருக்கு வெகுவிரைவாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கொடுத்து அவரது செயல் திறன் குறைந்து போகும் ஆபத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக அவருக்கு விரைவாக விளையாடும் வாய்ப்பை டிராவிட் வழங்காமல் இருக்கிறார்.

Umran Malik Rahul Dravid

மேலும் மூத்த வீரர்கள் உடன் இருந்து அணியில் உள்ள சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் டக் அவுட்டில் அமர்ந்தபடி அவர் போட்டியை காணும்போது சர்வதேச கிரிக்கெட்டில் தயாராக இன்னும் என்னென்ன ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிந்து கொள்வார் என்பதற்காகவே ராகுல் டிராவிட் அவருக்கு வாய்ப்பை வழங்காமல் இருந்து வருகிறார். உம்ரான் மாலிக்கிடம் நல்ல வேகம் இருக்கிறது. அதே வேளையில் அவர் இந்திய அணியுடன் இணைந்து பல போட்டிகளை வெளியில் இருந்து பார்க்கும் போது அவருடைய ஆட்டத்தை இன்னும் மேம்படுத்திக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொள்வார்.

- Advertisement -

அந்த வகையில் தான் உம்ரான் மாலிக்கிற்கு இதுவரை வாய்ப்பு வழங்காடாமல் வெளியில் அமரவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதோடு சர்வதேச போட்டிகளில் அழுத்தத்தை எவ்வாறு சமாளித்து ஆட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளவே ஒவ்வொரு ஆட்டத்தையும் டிராவிட் அவரை வெளியில் இருந்து பார்க்க வைக்கிறார். என்னை பொறுத்தவரை டிராவிட்டுக்கு நிச்சயம் வீரர்களின் திறன் குறித்து நன்றாக தெரியும். வெகுவிரைவில் உம்ரான் மாலிக்கிற்கான பயிற்சியை பூர்த்தி செய்து அவரை இந்திய அணியில் நிச்சயம் விளையாட வைப்பார் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவிக்க கெடு விதித்த ஐ.சி.சி – இந்த தேதிக்குள் சொல்லனும்

மேலும் அயர்லாந்து தொடர் குறித்து பேசிய அவர் : இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய ராகுல் திரிப்பாதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனெனில் ஐபிஎல் தொடரிலும் சரி, உள்ளூர் கிரிக்கெட்டில் சரி பல ஆண்டு காலமாக தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று முகமது கைஃப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement