உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவிக்க கெடு விதித்த ஐ.சி.சி – இந்த தேதிக்குள் சொல்லனும்

ind
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் என்று பலராலும் கணிக்கப்பட்ட இந்திய அணியானது லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவிலேயே தோல்வியை சந்தித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதன் பிறகு இந்திய அணியில் கேப்டன் மாற்றம் நடைபெற்று தற்போது ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கிறது.

Shreyas Iyer IND

இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக 4 டி-20 தொடர்களில் மட்டுமே இந்திய அணி விளையாட உள்ளதால் இந்த தொடர்களில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் இந்திய அணி வீரர்களை எவ்வாறு தேர்வு செய்யப் போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதோடு இம்முறை உலக கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதனால் சிறப்பான வீரர்களை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்க அனைத்து அணிகளுக்கும் ஐசிசி கெடு விதித்துள்ளது.

IND

அந்த வகையில் அக்டோபர் மாதம் இறுதியில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ யிடம் ஐசிசி சுற்றறிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் அயர்லாந்து தொடர் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இங்கிலாந்து தொடர் ஆகிய இரண்டு தொடர்களின் அடிப்படையில் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் தேர்வு அமையும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

எனவே அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் அசத்தும் வீரர்களுக்கு உலக கோப்பை தொடருக்கான அணியில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் கடந்த முறை ஏற்பட்ட தோல்வி இம்முறை ஏற்படக் கூடாது என்பதனால் பல்வேறு கெடுபிடிகள் இந்திய அணியின் தேர்வில் இருக்கும் என்பதனால் இந்திய அணித்தேர்வு எவ்வாறு அமையும் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : நல்ல டேலன்ட் இருந்தும். சஞ்சு சாம்சன் இப்படி சேன்ஸ் கிடைக்காம கஷ்டப்பட இதுவே காரணம் – கவாஸ்கர் கருத்து

அந்த வகையில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறப்போகும் அந்த 15 வீரர்கள் யார் என்கிற எதிர்பார்ப்பும் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்த தேர்வில் முதன்மை நபராக இருந்து அணி வீரர்களை தேர்வு செய்வார் என்று ஏற்கனவே பி.சி.சி.ஐ யின் தலைவர் கங்குலி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement