அவர் ஒரு ஆல்ரவுண்டரே கிடையாது.. அவரோட ஓவர்ல 4 சிக்ஸர் கூட ஈஸியா அடிக்கலாம் – முகமது கைப் விளாசல்

Kaif IND
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது நடப்பு சாம்பியனாக தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் தோல்வியையே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேறிய இந்திய அணி சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியை தழுவியது.

இவரெல்லாம் ஆல்ரவுண்டரே கிடையாது : முகமது கைப்

இதன் காரணமாக இனி எதிர்வரும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இந்த இரண்டு ஆட்டத்தில் இந்திய அணி ஒன்றில் தோற்றால் கூட இந்த அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறிவிடும்.

- Advertisement -

இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக வலிமையான அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி தற்போது பேட்டிங் ஆர்டரில் பெரியளவு தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் ஷிவம் துபே மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவதால் அவரை ஒரு ஆல்ரவுண்டர் என கூறக்கூடாது என முன்னாள் வீரரான முகமது கைஃப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது வைடு யார்க்கர் பந்து வீசவே ஷிவம் துபே முயற்சித்தார். அதாவது தனது பந்துவீச்சில் ரன் போகக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தற்காப்புடன் இருந்ததாக அவர் காட்டினார். ஆனாலும் அவரது பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் ரன் குவித்தனர்.

- Advertisement -

இதையும் படிங்க : திலக் வர்மாவுக்கு பதிலா அவரை விளையாட வையுங்க.. அதுதான் கரெக்ட் – ஸ்ரீகாந்த் பேச்சு

மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் ஒரு ஆல் ரவுண்டர் நமக்கு தேவையில்லை. அவர் எப்போதாவது ஒரு போட்டியில் விக்கெட் எடுக்கலாம். ஆனால் எல்லா போட்டிகளிலும் ரன்களை வாரி வழங்குவார். எனவே அவரை ஒரு முழுநேர ஆல்ரவுண்டர் என சொல்லக்கூடாது என முகமது கைஃப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement