தேவையில்லாத ஷாட் ஆடி அவுட் ஆகுறதே இவருக்கு வழக்கமா போச்சி. கடுமையாக விமர்சித்த – முகமது கைப்

Kaif
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்று கணக்கில் இத்தொடரில் முன்னிலை வகித்த வேளையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி போட்டி “டை”-யில் முடிந்தது.

INDia Hardik pandya

- Advertisement -

இதன் காரணமாக இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த டி20 தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட வேளையில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சஞ்சு சாம்சன், சுப்மன் கில் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய மூவருக்கும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் இந்த தொடரின் இரண்டு போட்டிகளில் விளையாடிய இளம் வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர்கள் மீதும் பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் விளையாடிய ரிஷப் பண்ட் தேவையில்லாத ஷாட்களை விளையாடி ஆட்டமிழப்பதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது கைஃப் கடுமையாக அவரை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ரிஷப் பண்ட் எப்பொழுதுமே தேவையில்லாத ஷாட்களை அடித்து ஆட்டம் இழப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்று கருதுகிறேன். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அவர் தேவையில்லாத ஷாட்டை அடித்து ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் மூன்றாவது போட்டியிலாவது சிறிது நேரம் நின்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மீண்டும் அதே தவறை செய்து தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டம் இழந்துள்ளார்.

இதையும் படிங்க : எப்போவுமே மும்பை ஆளனுமா? தமிழ்நாட்டை கிண்டலடித்த மும்பைகாருக்கு அஷ்வின், அபினவ் முகுந்த் கொடுத்த மாஸ் பதிலடி

இப்படி தொடர்ச்சியாக தெரிந்தும் அவர் மோசமாக விளையாடுவது ஏற்புடையது அல்ல. ரிஷப் பண்ட் தன் மீதுள்ள தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அணி நிர்வாகம் அவரை சற்று வெளியில் அமர்த்தி அவருக்கு பதிலாக வேறொரு வீரரை அந்த இடத்தில் கொண்டு வர வேண்டும் என முகமது கைப் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement