இந்தியாவை அவமானத்திலிருந்து காப்பாற்றிய.. விராட், ரோஹித் பற்றி மரியாதையா பேசுங்க.. கம்பீரை சாடிய கைப்

Mohammed Kaif 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அத்தொடருக்கு முன் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்தது. அவரது தலைமையில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய முதல் தொடரிலேயே இந்தியா தோற்றது.

இருப்பினும் சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற இந்தியா ஒயிட்வாஸ் அவமானத் தோல்வியையும் தவிர்த்தது. அந்த வெற்றிக்கு விராட் கோலி 73*, ரோஹித் சர்மா சதத்தை அடித்து 121* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினர். அத்துடன் 2027 உலகக் கோப்பையில் தங்களை கழற்றிவிட நினைக்கும் தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் அவர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

- Advertisement -

கொஞ்சம் மரியாதை கொடுங்க:

அடுத்து நடைபெற்ற டி20 தொடரை சூரியகுமார் தலைமையில் 2 – 1 (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா மண்ணில் வென்று இந்தியா அசத்தியது. அந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள் தொடரில் இந்தியா தோற்றத்தால் முடிவில் விராட், ரோஹித் போன்ற தனிநபர்களின் ஆட்டத்தை பயிற்சியாளராக தாம் கொண்டாட மாட்டேன் என்று கௌதம் கம்பீர் தெரிவித்தார். ஏனெனில் தனிநபர் ஆட்டத்தை விட இந்தியாவின் வெற்றியே தமக்கு முக்கியம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்தால் இந்திய ரசிகர்கள் மோசமாக விமர்சிப்பார்கள் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட நிலையில் இந்தியாவை ஒய்ட்வாஷ் அவமானத்திலிருந்து காப்பாற்றிய விராட், ரோஹித் ஆட்டத்துக்கு மரியாதைக் கொடுத்து பேசுங்கள் என்றும் அவர் கம்பீரை சாடியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஃகைப் சாடல்:

“அங்கே சதம் அடித்ததற்கு மரியாதை இருக்க வேண்டும் அல்லவா? சதம் மற்றும் மேட்ச் வின்னிங் ஆட்டங்களுக்கு எப்போதுமே மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அதை கௌதம் கம்பீர் கொண்டாட விட்டாலும் மக்கள் கொண்டாடினார்கள். அன்றைய நாளில் ரோஹித் சதத்தை அடித்து, விராட் அவுட்டாகாமல் இருந்ததால் இந்தியா ஒயிட்வாஸ் தோல்வியைத் தவிர்த்தது”

இதையும் படிங்க: இன்னும் 54 ரன்கள் தேவை.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதனை நிகழ்த்த காத்திருக்கும் – சுப்மன் கில்

“ஆம் நாம் தொடரில் தோல்வியுற்றோம். ஆனால் குறைந்தபட்சம் நாம் ஒயிட்வாஸ் தோல்வியைத் தவிர்த்தோம். இந்தியாவில் ஒய்ட்வாஸ் தோல்வியை சந்தித்தால் மோசமான எதிர்வினைகள் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். எனவே கடைசிப் போட்டியில் வென்றதால் இந்தியாவின் பெருமையை விராட், ரோஹித் காப்பாற்றினார்கள். அப்போட்டியில் வென்றதாலேயே அடுத்து நடைபெற்ற டி20 தொடரை வெல்வதற்கான வேகம் இந்தியாவுக்கு கிடைத்தது” என்று கூறினார்.

Advertisement