இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக 2023ஆம் ஆண்டு சுப்மன் கில் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி தொடர்ச்சியாக அசத்த முடியாமல் தடுமாறினார். அதனால் அவரை கழற்றி விட்ட இந்திய அணி அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சனுக்கு ஓப்பனிங்கில் வாய்ப்பு கொடுத்தது.
அந்த வாய்ப்பில் அபிஷேக் சர்மா நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி அசத்தி வருகிறார். மறுபுறம் 3 சதங்கள் அடித்து அசத்திய சாம்சன் ஒருவழியாக நிலையான இடத்தை பிடித்தார். அப்போது 22 முறை டக் அவுட்டாகாத வரை அணியிலிருந்து நீக்க மாட்டோம் என்று அவரிடம் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் திடீரென தேர்வுக்குழு சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைக்கிறது.
கம்பீரின் அநியாயம்:
அதனால் அவரை துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்த இந்திய அணி ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பைஜ் கொடுத்தது. அந்த வாய்ப்பில் இதுவரை திணறலாக விளையாடும் கில் கடைசி 17 சர்வதேச டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்கவில்லை. மறுபுறம் ஆசியக் கோப்பையில் மிடில் ஆர்டரில் விளையாடி வெற்றியில் பங்காற்றிய சாம்சனை இத்தொடரில் கம்பீர் மொத்தமாக கழற்றி விட்டுள்ளார்.
இந்நிலையில் சுமாராக விளையாடும் சுப்மன் கில்லை எப்படியாவது செட்டிலாக்க வேண்டுமென கௌதம் கம்பீர் அதிக வாய்ப்புகளை வழங்குவதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். ஆனால் கிடைத்த வாய்ப்பில் 3 சதங்கள் அடித்த சம்சானுக்கு அவர் தகுதியான வாய்ப்புகளை கொடுக்கவில்லை என்று ஃகைப் சாடியுள்ளார். அந்த வகையில் அநியாயமாக நடந்து கொள்ளும் கம்பீர் துணைக் கேப்டன் என்று பாராமல் கில்லை கழற்றி விட்டு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஃகைப் விளாசல்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அணியில் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது. கடந்தக் காலங்களில் துணை கேப்டனும் நீக்கப்பட்டுள்ளார்கள். எனவே அணியின் நலனுக்காக கில்லுக்கு ஓய்வு கொடுத்து விட்டு வேறு ஒரு வீரரை விளையாட வைப்பது தவறாக இருக்காது. தற்போது மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளதாக தெரிகிறது. நீங்கள் ஜெய்ஸ்வாலை நீக்கி விட்டு சாம்சனை பெஞ்சில் அமர வைத்துள்ளீர்கள்”
இதையும் படிங்க: எல்லா பாலும் சிக்ஸ் அடிக்க பாக்காதீங்க.. கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா இதை பண்ணுங்க.. அபிஷேக் சர்மாவுக்கு – ஏ.பி.டி அட்வைஸ்
“ஓப்பனிங்கில் நிறைய ரன்கள் குவித்த அவருக்கு நீங்கள் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் 5 டி20 இன்னிங்ஸில் 3 சதங்கள் அடித்துள்ளார். வரலாற்றில் யாரும் அதை செய்யவில்லை. சிலருக்கு குறைவான வாய்ப்பு கிடைக்கிறது. அணியில் செட்டிலாக்க வேண்டும் என்பதற்காக சிலருக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தற்போது மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளது” என்று கூறியுள்ளார்.



