எல்லா பாலும் சிக்ஸ் அடிக்க பாக்காதீங்க.. கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா இதை பண்ணுங்க.. அபிஷேக் சர்மாவுக்கு – ஏ.பி.டி அட்வைஸ்

ABD and Abhishek
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது டிசம்பர் 14-ஆம் தேதியான இன்று தரம்சாலா நகரில் நடைபெற இருக்கிறது.

அபிஷேக் சர்மாவிற்கு அட்வைஸ் வழங்கிய ஏ.பி.டி :

இதன் காரணமாக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறியது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் இந்த மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் துவக்க வீரரான அபிஷேக் சர்மாவும் முதல் இரண்டு போட்டிகளில் பெரியளவில் சிறப்பாக விளையாடதால் மூன்றாவது போட்டியில் அவரும் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டிக்கு முன்னதாக அபிஷேக் ஷர்மாவின் ஆட்டத்திற்கு சில அறிவுரைகளை முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸ் வழங்கியுள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : டி20 போட்டிகளில் டாப் 3 வீரர்கள் எப்போதுமே சிறப்பாக விளையாட வேண்டும் என்ற லேபுள் இருக்கிறது. அதன் காரணமாகவே அழுத்தத்தை சந்தித்து நிறைய வீரர்கள் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாமல் போகின்றனர். டாப் 3 வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்ற லேபுளை நீக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்றவாறு நாம் பேட்டிங் செய்வது அவசியம். அபிஷேக் சர்மா போன்ற ஒரு வீரர் அனைத்து பந்துகளையும் சிக்ஸ் அடிக்க விரும்பக் கூடாது. ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடியதாலே அவர் மீது ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க : ஐ.பி.எல் மினி ஏலத்தில் இந்த 5 வீரர்களை வாங்க கடுமையான போட்டி இருக்கும் – இர்பான் பதான் கருத்து

ஆனால் சர்வதேச போட்டிகளை பொறுத்தவரை அனைத்து பந்துகளையும் அடிக்க பார்க்காமல் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருந்து பந்தை கவனித்து அது நமது ஹிட்டிங் ஏரியாவில் இருந்தால் தாராளமாக அதிரடியாக விளாசலாம். மற்றபடி பந்திற்கு மரியாதை கொடுத்து அடிப்படையான விஷயங்களையும் போட்டிகளில் பயன்படுத்த வேண்டும் என ஏ.பி.டி அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement