வயதானாலும் தோணி சிங்கம்தான்…இந்தியாவின் NO:1 Fielder புகழாரம் – யார் தெரியுமா ?

- Advertisement -

மஹிந்திர சிங் தோனி, அதிரடியாக ஆடிவந்த இவரை ஒரு சில போட்டிகளில் சறுக்கல்களை கண்டதும் இவரை பற்றிய பல்வேறு கருத்துக்கள் வந்தது. மேலும் இவரின் வயதை காட்டி இவர் ஒய்வு பெற வேண்டும் என்று பல தரப்பினரும் குறிவைத்த நிலையில் வந்தது ஐபில். அதற்கு பிறகு தோனியின் ஆட்டத்தின் திறனே முழுதாக மாறிவிட்டது.

nigidi

- Advertisement -

தற்போதியது சென்னை அணியின் படை தளபதியாக இருந்து வரும் தோனி தனது அணியை தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தக்க வைத்துக்கொள்கிறார் . அது மட்டுமில்லாமல் தனது அபார நடத்தினால் அணியை வெற்றியின் பாதை நோக்கி பயணம் செய்ய வைத்துள்ளார். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மொஹம த் கைப் தோனியின் ஆட்டத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக பேசியுள்ளார்.

நேற்று புனேவில் நடந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 211 ரன்களை குவித்தது. அதிலும் 22 பந்துகளில் அரைசதத்தை எடுத்த தோனியின் ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் டெல்லி அணியில் ஆடிய ரிஷாப் பண்ட் மற்றும் தமிழக வீரர் ஷங்கரும் அருமையாக விளையாடினர்.

இந்நிலையில் நேற்றய அதை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மொஹம த் கைப் ” 213 ரன்கள் இலக்கு என்பது சாதாரணமான விஷயம் இல்லை. இருப்பினும் பண்ட் மற்றும் ஷங்கர் சிறப்பாக விளையாடினர். மேலும் சென்னை அணியின் புதிய பந்துவீச்சாளரான ங்கிடி சிறப்பாக பந்து வீசினார். இதே போன்று இனி வரும் போட்டிகளிலும் அவர் பந்து வீச வேண்டும். ஆனால் என்னை பொறுத்தவரை இந்த போட்டியில் மிக சிறப்பானது எது என்றால் தோனியின் பேட்டிங் தான் “என்று கூறியுள்ளார்.

Advertisement