- Advertisement -
இந்திய கிரிக்கெட்

13 வருடத்துக்கு முன்னாடி தோனி செஞ்சதை மனசுல நினைச்சுக்கோங்க.. தடுமாறும் விராட் கோலிக்கு.. ஃகைப் அட்வைஸ்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெறுகிறது. அதில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் அப்போட்டிக்கு முன்பாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தடுமாற்றமான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

ஏனெனில் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அவர் இந்தியா வெற்றி பெறுவதற்கு சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது. இதற்கு முந்தைய தொடர்களில் 3வது இடத்தில் களமிறங்கி அபாரமாக செயல்பட்ட அவர் இம்முறை துவக்க வீரராக விளையாடி வருகிறார். அதனால் அவரை மீண்டும் 3வது இடத்தில் விளையாட வைக்குமாறு பலரும் கேட்டுக் கொண்டனர்.

- Advertisement -

கைப் ஆலோசனை:
ஆனால் அதை செய்யாத இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் இறுதிப் போட்டியிலும் அவரை துவக்க வீரராகவே களமிறக்க தயாராகியுள்ளது. இந்நிலையில் 2011 உலகக் கோப்பையில் ஆரம்பம் முதலே தடுமாறிய முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி முக்கியமான ஃபைனலில் 91* ரன்கள் அடித்து வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்ததாக முகமது கைஃப் தெரிவித்துள்ளார். அதை விராட் கோலியும் உத்வேகமாக எடுத்துக்கொண்டு ஃபைனலில் அசத்த வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “எம்எஸ் தோனி 2011 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடாவிட்டாலும் ஃபைனலில் தன்னுடைய பார்மை கண்டறிந்ததை விராட் கோலி நினைவில் கொள்ள வேண்டும். அதுவே என்னுடைய சிறிய ஆலோசனை. அதிரடியாக விளையாடுவதில் சிறந்த வீரரான அவர் எந்த பவுலிங் அட்டாக்கையும் நொறுக்கக் கூடியவர். 2011 உலகக் கோப்பையில் மகேந்திர சிங் தோனி ஃபார்மில் இல்லை”

- Advertisement -

“இருப்பினும் ஃபைனலில் அவர் 91 ரன்கள் அடித்தார். குலசேகராவுக்கு எதிராக அவர் அடித்த சிக்சர் இன்னும் அனைவரது மனதில் இருக்கிறது. அந்த வகையில் இப்போட்டியில் விராட் கோலி ஹீரோவாக வருவதற்கு வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். நாம் சுமாரான ஃபார்மில் இருக்கிறோம் என்பதை முதலில் அவர் மறக்க வேண்டும். ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் கொல்கத்தாவில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் சதமடித்தார்”

இதையும் படிங்க: எல்லா நாளும் அசத்த முடியாது.. ஃபைனலிலும் அவரை சாய்க்க பிளான் ரெடியா வெச்சுருக்கோம்.. மார்க்ரம் பேட்டி

“அன்றைய நாளில் அற்புதமாக விளையாடிய அவர் அதிரடியாக விளையாடவில்லை. மாறாக தரமான ஷாட்டுகளை அடித்தார். அதே போல ஃபைனலில் அடித்து நொறுக்க முயற்சிக்காமல் அவர் க்ளாஸ் ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். பாண்டியா, ரோகித், சூரியகுமார் ஆகியோர் வேகமாக விளையாட வேண்டும். ஆனால் விராட் கோலி முழுமையாக 20 ஓவர் விளையாட வேண்டும். எனவே 2011 உலகக்கோப்பையில் தோனியை போல அவரும் ஹீரோவாக வர வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

- Advertisement -