- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் தனது இடத்தை இழக்க இதுதான் காரணம் – முகமது கைப் கொடுத்த விளக்கம்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான சுப்மன் கில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அப்படி துணை கேப்டனாக பதவி உயர்வு பெற்றதோடு மட்டுமின்றி டி20 போட்டிகளில் துவக்க வீரராகவும் தற்போது அபிஷேக் சர்மாவுடன் இணைந்து விளையாடி வருகிறார். இதன் காரணமாக கடந்த ஓராண்டாக இந்திய டி20 அணியில் துவக்க வீரராக விளையாடி வந்த சஞ்சு சாம்சனின் இடம் பறிபோனது.

சஞ்சு சாம்சன் இடத்தை இழக்க என்ன காரணம்? : முகமது கைப்

பின்னர் தொடர்ச்சியாக தற்போது சுப்மன் கில்லே டி20 போட்டிகளில் துவக்க வீரராக விளையாடி வருகிறார். இப்படி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு சுப்மன் கில்லை துவக்க வீரராக கொண்டு வந்தது தவறு என்று பலரும் பேசி வரும் வேளையில் சஞ்சு சாம்சன் இந்திய டி20 அணியில் தனது இடத்தை இழக்க என்ன காரணம்? என்பது குறித்த தெளிவான விளக்கத்தை முன்னாள் வீரரான முகமது கைஃப் வழங்கி உள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : சஞ்சு சாம்சன் கடந்த ஓராண்டாகவே துவக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் தற்போது அவரது இடம் அணியில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளதோடு குழப்பத்தையும் அளித்துள்ளது. ஏனெனில் சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதான் சஞ்சு சாம்சனுக்கு தற்போது பின்னடைவாகவும் மாறியுள்ளது. ஏனெனில் துவக்க வீரராக சிறப்பாக விளையாடும் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் அந்த அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போகிறது. அதேவேளையில் ஜிதேஷ் சர்மா ஃபினிஷராக ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் களமிறங்கி மிகச் விளையாடுகிறார்.

- Advertisement -

அதனால் அவரையே பிளேயிங் லெவனில் இணைக்க நிர்வாகமும் ஆர்வம் காட்டுகிறது. சுப்மன் கில் எதிர்கால இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக பார்க்கப்படுவதால் அவரை துவக்க வீரருக்கான இடத்திலிருந்து நீக்குவது கடினம். அதேவேளையில் சஞ்சு சாம்சனையும் மிடில் ஆர்டரில் விளையாட வைப்பது கடினம்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டிக்கான இந்திய அணி இதுதான் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

அதனாலேயே சுப்மன் கில் துவக்க வீரராகவும், ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் தொடர்வார்கள் என்று நினைக்கிறேன். சஞ்சு சாம்சன் துவக்க வீரராக மிகச்சிறப்பான சாதனைகளை வைத்திருந்தாலும் சுப்மன் கில்லின் துணை கேப்டன் பதவி அவரது இடத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக முகமது கைப் விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -