எனது பந்துவீச்சை கண்டு லாராவே பயப்படுவார். பாகிஸ்தானின் பகுதிநேர பந்துவீச்சாளர் செய்த காமெடி – விவரம் இதோ

Lara
- Advertisement -

சச்சின் காலகட்டத்தில் ஆடிய பேட்ஸ்மேன்களில் அவருக்கு இணையான வீரர் பிரையன் லாரா. வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச்சேர்ந்த முன்னாள் வீரரான இவர் தனது கிரிக்கெட் வாழ்வில் பல ஜாம்பவான் பந்து வீச்சாளர்களை எதிர்த்து சமாளித்து அதிரடியாகவும் ஆக்ரோஷமாகவும் ஆடி பெயர் போனவர். மேலும் இந்தியாவில் எவ்வாறு சச்சின் பார்க்கப்படுகிறாரோ அந்த அளவிற்கு வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களால் நேசிப்படுகிறார்.

lara

- Advertisement -

வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ்,அனில் கும்ப்ளே, முத்தையா முரளிதரன் என பல ஜாம்பவான்களை மிகவும் எளிதாக ஆடியவர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 131 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 11,953 ரன்களையும் 299 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10,405 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக டெஸ்ட் போட்டிகளில் 400 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான் பேட்ஸ்மேன் பிரையன் லாரா தனது பந்து வீச்சினை கண்டு பயந்து போனதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார். இவர் ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது .

Hafeez 1

இடதுகை பேட்ஸ்மேன்கள் எப்போதும் எனது பந்துவீச்சை கண்டு பயப்படுவார்கள் அப்படிப்பட்ட ஒரு பேட்ஸ்மேன் தான் பிரையன் லாரா எனது பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமமாக இருப்பதாக லாரா என்னிடம் கூறியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களை நன்றாக ஆடக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் அவர். அவரை எனது பந்தை கண்டு தடுமாறுகிறார் என்று இஷ்டத்திற்கு பேசி உள்ளார்.

இவர் பாகிஸ்தான் அணிக்காக 55 டெஸ்ட் போட்டிகளிலும் 716 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் டெஸ்ட் போட்டிகளில் 53 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 139 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. பகுதிநேர பந்துவீச்சாளரான இவரின் பந்துவீச்சில் லாரா பயந்தார் என்று கூறியுள்ளதால் இவரின் இந்த கருத்திற்கு ரசிகர்கள் தங்களது எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement