பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரரான முஹமது ஹபீஸ் உலக கோப்பை தொடருக்குப் பின்னர் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் புறக்கணிக்கப்பட்ட அவர் தற்போது கரீபியன் லீக் டி20 தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெற்று அங்கு சென்று டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
If you wanna copy Virat Kohli .. do it by your performance.. the act you are trying to copy is called "Shodapan". Nothing else dear !!
— Shahzad Khan Niazi (@Shaz36n) September 22, 2019
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் செயின்ட் லூசியா நகரில் சூரிய மறைவின் போது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் ஒன்று சட்டை இல்லாமலும் மேலும் அந்த இயற்கைச் சூழலையும் படமெடுத்து அவர் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட இந்திய ரசிகர்கள் நீங்கள் விராட் கோலியை காப்பி அடிக்க நினைத்தால் அதனை செயல்பாட்டில் காப்பியங்கள்.
அதை விடுத்து அவரை போன்று போட்டோ எடுக்கிறேன் புகைப்படத்தை பதிவிடுகிறேன் என்று இதுபோன்று கோமாளித்தனம் செய்யாதீர்கள் என்று தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின்போது விராட் கோலியும் இதுபோன்று புகைப்படத்தை அவரது மனைவியுடன் சேர்ந்து பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலியின் அந்த புகைப்படத்தையும், ஹபீஸ்ஸின் இந்த புகைப்படத்தையும் இணைத்து கோலி போன்று உங்களால் புகைப்படம் மட்டும் தான் எடுக்கமுடியும். அவரின் திறமை முன்னர் நீங்கள் ஒன்றுமே இல்லை என்று கமெண்டுகளை பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.