எனக்கு ஏன் இப்படி நடந்துச்சுன்னு உண்மையிலே புரியலே. யார் மீதும் பழிபோட விரும்பல – மனம்திறந்த அசாருதீன்

Azharuddin
- Advertisement -

2000 ஆம் ஆண்டு இந்திய அணி மேட்ச் பிக்ஸிங் பிரச்சனையில் சிக்கி பெரும் சரிவை சந்தித்தது. அப்போது தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தது. அந்த கட்டத்தில் கேப்டனாக இருந்த முகமது அசாருதீன் மீது பெரும் குற்றம் சாட்டப்பட்டது. இவர் மேட்ச் பிக்சிங் செய்துதான் இந்திய அணி பல தொடர்களில் தோற்றது என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

Azharuddin

- Advertisement -

இதன் காரணமாக உடனடியாக பிசிசிஐ இவருக்குத் தடை விதித்தது. வாழ்நாள் தடை விதிக்கப்பட்டதால் காரணமாக இவரால் அதன் பின்னர் கிரிக்கெட் ஆட முடியவில்லை. கிரிக்கெட் சம்பந்தமான விவகாரங்களிலும் கலந்து கொள்ள முடியவில்லை.

கபில்தேவிற்குப் பிறகு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கேப்டனாக இருந்தவர் இவர். 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக, சிறந்த கேப்டனாக இருந்தார். இந்த தடை காரணமாக அவரால் மீண்டும் கிரிக்கெட் ஆட முடியவில்லை.

azharuddin

அதன் பின்னர் ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தன் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்தார். பின்னர் 12 வருடங்கள் கழித்து 2002ஆம் ஆண்டு அசாருதீன் மீது விதிக்கப்பட்ட தடை சட்டத்திற்கும் புறம்பானது என தீர்ப்பு வந்தது. அதன் பின்னர் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் ஆனார் அசாருதீன். இந்நிலையில் இந்த தடை குறித்து தற்போது பேசிய்ள்ளார் அவர்,

azharuddin

என்னை ஏன் தடை செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் யார் மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. யார் மீதும் பழியைப் போட விரும்பவில்லை. இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 16 வருடங்கள் விளையாடி விட்டேன், 10 ஆண்டுகளுக்கு மேல் கேப்டனாக இருந்துள்ளேன். இதைவிட அதிகமாக என்ன கேட்டு விட முடியும் என்று கூறியுள்ளார் முகமது அசாருதீன்.

Advertisement