பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் கடந்த 2009-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 36 டெஸ்ட் போட்டிகள், 61 ஒருநாள் போட்டி மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இளம் வயதிலேயே மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது அமீர் சர்வதேச அளவில் தலைசிறந்த பவுலராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
2026 ஐ.பி.எல் தொடரில் விளையாட எனக்கு ஆசையுள்ளது : முகமது அமீர்
ஆனால் இடையில் சூதாட்ட பிரச்சனைகள் சிக்கிய அவரது கிரிக்கெட் கரியர் தலைகீழாக மாறியது. பின்னர் ஒரு வழியாக தன்மீது விதிக்கப்பட்ட தடையிலிருந்து மீண்டு வந்த முகமது அமீர் சில ஆண்டுகள் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து தற்போது உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்த 2026-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட தனக்கு ஆசை உள்ளதாக தற்போது வெளிப்படையான ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : எனக்கு 2026 ஐபிஎல் தொடரில் விளையாட ஆசை உள்ளது. இதற்காக நான் விண்ணப்பிக்கவும் உள்ளேன்.
அதிலும் குறிப்பாக விராட் கோலியுடன் சேர்ந்து ஆர்சிபி அணியில் விளையாடுவதில் எனக்கு மிகவும் விருப்பம். ஏனெனில் ஆர்.சி.பி அணி எனக்கு மிகவும் பிடிக்கும். விராட் கோலி ஒரு சிறந்த வீரர். எப்பொழுதுமே திறமையை அங்கீகரிக்க கூடிய அவர் என்னுடைய பந்துவீச்சை பாராட்டி எனக்கு ஏற்கனவே ஒரு பேட் ஒன்றினை பரிசளித்துள்ளார்.
மேலும் எனது பந்துவீச்சை மிகவும் விரும்பும் அவர் என்னை மைதானத்தில் வைத்து பாராட்டியும் இருக்கிறார். முகமது அமீர் இப்படி ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தாலும் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க கூடாது என்பதினால் அவர் சேர்க்கை எவ்வாறு சாத்தியமாகும் என்பது பலரது கேள்வியாகவும் இருக்கலாம்.
இதையும் படிங்க : போனமுறை பண்ண அந்த இந்தமுறை பண்ணமாட்டேன்.. கப் எங்களுக்கு தான் – சுப்மன் கில் அதிரடி
ஆனால் முகமது அமீர் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இங்கிலாந்து நாட்டின் குடியுரிமைக்காக காத்திருக்கிறார். ஒருவேளை இந்த ஆண்டு இறுதிக்குள் அவருக்கு இங்கிலாந்து குடியுரிமை கிடைத்தால் நிச்சயம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு அவர் பாகிஸ்தான் நாட்டை சேராத வெளிநாட்டு வீரராக ஐபிஎல் தொடரில் விளையாட விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



