
இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா டி20 கிரிக்கெட் போட்டிகளில் கடந்த ஓராண்டாக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அதோடு சர்வதேச டி20 போட்டிகளில் 190 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடும் அவர் பவுலருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். அவரது அதிரடியான ஆட்டம் மூலம் பல்வேறு சாதனைகளையும் தகர்த்து வருகிறார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 டி20 உலக கோப்பை தொடரில் பெரிய அளவில் அசத்துவார் என்று பலராலும் பேசப்பட்ட அபிஷேக் ஷர்மா அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியின் போது முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் நமீபியா அணிக்கெதிரான போட்டியை காய்ச்சலால் தவறவிட்ட அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
ஆனாலும் இந்த தொடரின் பிற்பகுதியில் அவரது அதிரடியை நம்மால் பார்க்க முடியும் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அபிஷேக் ஷர்மா பந்தை பார்த்து சுத்தும் ஒரு சாதாரண வீரர் தான் அவரிடம் வேறு எந்த ஸ்பெஷலும் கிடையாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான முகமது ஆமீர் அவரை விமர்சிக்கும் வகையில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் சர்மா பந்தை பார்த்து பேட்டை சுழற்ற கூடிய ஒரு சாதாரண ஸ்லாக் பேட்ஸ்மேன் தான். அவரிடம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பேட்டிங் நுட்பங்கள் எதுவும் கிடையாது. அதனால் அவர் தோல்வியடைய நிறையவே வாய்ப்புகள் உள்ளன. அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மேனை சமாளிப்பது கடினமான காரியம் எல்லாம் கிடையாது.
இதையும் படிங்க : ரிங்கு சிங் விடயத்தில் இந்த மாற்றத்தை இந்திய அணி செய்தே ஆகனும் – பார்த்திவ் பட்டேல் கருத்து
மிக எளிதாக அபிஷேக் சர்மாவை வீழ்த்தலாம். உடம்பை நோக்கி பந்து வீசினால் அவர் திணறிவிடுவார். அதுமட்டும் இன்றி வேகம் குறைத்து வீசப்படும் பந்துகளையும் எதிர்கொள்ள தடுமாறுவார். இந்த இரண்டு பந்துகளை வீசினாலே அபிஷேக் சர்மாவை எளிதாக ஆட்டமிழக்க வைக்கலாம் என முகமது ஆமீர் கூறியது குறிப்பிடத்தக்கது.