- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணி டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெறாது.. இதுதான் காரணம் – முகமது ஆமீர் விமர்சனம்

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரின் தற்போதைய நிலையில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் சுற்று போட்டி நடைபெறவுள்ளது.

இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாது : முகமது ஆமீர்

இவ்வேளையில் நாளையிலிருந்து சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இந்த சூப்பர் 8 சுற்றில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் இரு அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். அப்படி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறப்போகும் அணிகள் எவை? எந்த அணி இறுதிப்போட்டி வரை செல்லும்? என்கிற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியனான இந்திய அணி தகுதி பெறாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான முகமது ஆமீர் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னை பொறுத்தவரை இந்திய அணி இந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாது.

ஏனெனில் லீக் சுற்று ஆட்டங்களின் போது பாகிஸ்தான் போட்டியை தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலுமே இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாகவே இல்லை என்று தோன்றுகிறது. அவர்கள் பேட்டிங்கில் பெரிய சரிவை சந்தித்தார்கள். ஆனால் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றன.

- Advertisement -

இதையும் படிங்க : கிளென் மேக்ஸ்வெல்லின் ஆட்டம் க்ளோஸ்.. எனக்கு நம்பிக்கை இல்ல – ரிக்கி பாண்டிங் பளீர் பேச்சு

அவர்கள் விளையாடும் விதத்தை பார்க்கும் போது நிச்சயம் எந்த ஒரு அணியையும் வீழ்த்தும் திறமை அவர்களிடம் உள்ளது. எனவே இந்திய அணியை அவர்கள் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறாமல் இந்திய அணியை வெளியேற்றுவார்கள் என முகமது அமீர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -