தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற இருக்கும் முகமது ஆமீர். காரணம் இதுதான் – இவரால் தான் இந்த மாற்றமாம்

Amir

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும், சமீபகாலமாகவே அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தின் மீதும், பயிற்சியாளர்கள் மீதும் தொடர்ந்து விமர்ச்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு பயிற்சியாளர்களான மிஸ்பா உல் ஹக் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோரின் மீது சரமாரியான விமர்சனங்களை முன்வைத்திருந்த முன்னாள் வீரர் ஒருவர் தனது ஓய்வு முடிவை வாபஸ் பெற்றுக்கொண்டு மீண்டும் சர்வதேச போட்டிகளில் அந்நாட்டிற்காக விளையாடும் முடிவை எடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

Amir

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான் அணியின் முன்னனி வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த முஹம்மது ஆமீர் தனது 28 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்த ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சித்து அளித்திருந்தார். ஓய்வு முடிவை அறிவித்த பிறகு அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தின் மீதும், பயிற்சாளர்களின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளிப்படையாகவே முன்வைத்த அவர், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டு குடியுரிமையையும் பெறப் போவதாக அறிவித்து அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது அந்த முடிவில் இருந்து அவர் பின்வாங்கி இருப்பதாகவும், எல்லாம் நல்லபடியாக அமைந்தால் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவேன் என்றும் பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டு கிரக்கெட் நிர்வாகத்தின் தலைமைச் செயலதிகாரியான வாசிம் கான், முஹம்மது ஆமீரை சந்தித்தப் பிறகுதான் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து அந்நாட்டு விளையாட்டு இணையதளம் ஒன்றிர்கு அவரளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

பிஎஸ்எல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டங்கள் நடைபெறுவதற்கு முன்பாக வாசிம் கான் எனது வீட்டிற்கு வந்தார். அவரிடம் நான் அணியில் எனக்கு இருக்கும் பிரச்சனைகள் குறித்து முழுவதுமாக கூறினேன். அதை கவனாமாக கேட்டுக் கொண்ட அவர், என்னுடைய விடயத்தில் அணி நிர்வாகம் தவறான முடிவை எடுத்துள்ளதை ஏற்றுக் கொண்டார். மேலும் இதுபோல் மறுபடியும் நடக்காது என்ற உறுதியையும் அவர் எனக்கு அளித்துள்ளார். எனவே அனைத்தும் நல்லபடியாக சென்றால், பாகிஸ்தான் அணிக்காக நான் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

amir

டி20 உலக கோப்பையானது வருகிற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. ஒருவேளை முஹம்மது ஆமீர் தன்னுடைய ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக் கொண்டார் என்றால் வரவிருக்கும் டி20 உலக கோப்பையிலேயே அவருக்கு பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement