28 வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் பிரபலம் – பின்னால் உள்ள அதிர்ச்சி சம்பவம்

amir
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் தனது 17ம் வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தான் அறிமுகமான காலத்தில் சிறப்பாக பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளராக பல சாதனைகளை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டியில் அறிமுகமானவர் தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி பல வீரர்களின் பாராட்டை பெற்றார்.

amir

- Advertisement -

இருப்பினும் சூதாட்ட பிரச்சனையில் சிக்கிய அவர் கடந்த பல ஆண்டுகளாக தடையில் இருந்து மீண்டு வந்து தற்போது விளையாடிக் கொண்டிருக்கிறார். இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் 119 விக்கெட்டுகளையும், 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுகளையும், 50 t20 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் தடையில் இருந்து மீண்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட போவதில்லை என்றும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் அனைத்திலும் இருந்து நடைபெறுவதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதில் : இனி வரும் நாட்களில் நான் சர்வதேச போட்டிகளில் விளையாட போவதில்லை இந்த முடிவுக்கு காரணம் பாகிஸ்தான் அணியை நிர்வாகத்தினர் கொடுத்த அழுத்தம் தான். என்னை இன்னும் அவர்கள் இழிவானவர் என்றே அணியில் வழி நடத்தி வருகின்றனர். நான் ஷாட்டர் பார்மட் இல் விளையாட தயாராக இருந்தும் எனக்கு அணியில் வாய்ப்பு தர மறுக்கின்றனர்.

எனக்கு நடந்தவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இனிமேல் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் கீழ் என்னால் விளையாட முடியாது எனக் கருதுகிறேன். இதனால் நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். தடையில் இருந்து திரும்பி வந்த போது எனக்கு வாய்ப்பு கொடுத்த அப்ரிடிக்கு நன்றி என அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார். மேலும் பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்து சென்று மீண்டும் உலகளவில் நடக்கும் டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தனது திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

2019ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் 8 ஆட்டங்களில் விளையாடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி 2017 ஆம் ஆண்டு ஐசிசி சம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் கோப்பையை வெல்ல மிகப்பெரிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியின்போது ரோகித், தவான், கோலி என இந்தியாவின் டாப் 3 பேர் வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றி ஆட்டத்தை மாற்றியவர் அமீர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement