சர்வதேச கிரிக்கெட்டில் நான் பந்துவீச பயந்த 3 பேட்ஸ்மேன்கள். என்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க – ஆமீர் தேர்வு

Amir

முகமது ஆமீர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தனது அற்புதமான திறமையை வீணடித்து கிரிக்கெட் . வாழ்க்கையை முடித்துக்கொண்டார். 2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் சூதாட்டத்தில் மாட்டிக் கொண்டதை அடுத்து ஐந்து ஆண்டுகள் ஐசிசி இவருக்கு கிரிக்கெட் விளையாட தடை விதித்தது. தடைவிதித்து பின்னர் வந்த போதிலும் இவரது பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது ஆனாலும் பாகிஸ்தான் அணியின் புறக்கணிப்பு காரணமாக அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

amir

முகமது அமீர் 36 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அவர் மொத்தமாக 119 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். மொத்தமாக 297 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது எக்கானமி 2.86 ஆகும்.ஒருநாள் போட்டிகளில் 61 போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுகளை முகமது ஆமிர் கைப்பற்றியிருக்கிறார் , ஒருநாள் போட்டிகளில் இவரது எக்கானமி 4.78 ஆகும்.

- Advertisement -

இந்நிலையில் 29 வயதான முகமது ஆமீர் சமீபத்தில் தன்னை மிகவும் கஷ்டப்படுத்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் தனக்கு பிடித்த பவுலர்களை பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

watson

2009ஆம் வருடம் எனது கிரிக்கெட் கேரியரில் ஆரம்பத்தில் ஷேன் வாட்சன் தான் என்னை மிகவும் கஷ்டப்படுத்துவார், எனது பந்துவீச்சை அனைத்து ஏரியாக்களிலும் அடித்துவிடுவார். நான் அவரை பலமுறை விக்கெட் எடுத்து இருந்தாலும் என்னை மிகவும் கஷ்டப்படுத்திய பேட்ஸ்மேன் அவர்தான்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொனாதன் டிராட் தான் மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறார் என்று குறிப்பிட்ட அவர் மேலும் தற்பொழுது உள்ள பேட்ஸ்மேன்களில் ஸ்டீவன் ஸ்மித்க்கு பந்து வீசுவது மிகக்கடினம்.

- Advertisement -

Smith

அவர் மிகவும் டெக்னிக்காக ஆக ஆடக்கூடிய கிரிக்கெட் வீரர் ஆவார். எனவே அவருக்கு பந்து வீசுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்று கூறினார். மேலும் சமீப காலத்தில் ஆடும் போது உங்களுக்கு பிடித்த பவுலர் யார் என்று கேட்ட கேள்விக்கு , இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பிரித் பும்ரா தான் எனக்கு முதலில் பிடிக்கும் என்று கூறினார். பின்னர் நியூசிலாந்தை சேர்ந்த டிரென்ட் போல்ட் அவருக்கு அடுத்தபடியாக பிடிக்கும். அவருக்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ரபாடாவை எனக்கு மூன்றாவதாக பிடிக்கும் என்று கூறி கடைசியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிச்செல் ஸ்டார்க்கையும் எனக்கு பிடிக்கும் என்று கூறினார்.

Advertisement