தோனியைப் பத்தி விசாரிச்சேன். அதுக்கப்புறம் எப்படா அவருக்கு கீழ விளையாட போறோம்னு இருக்கேன் – மொயின் அலி

Moeen-ali-2
- Advertisement -

இந்தியாவில் வருகிற ஏப்ரல் 09 ஆம் தேதி துவங்கி மே மாதம் இறுதி வரை ஐபிஎல் தொடரின் 14 ஆவது சீசன் நடைபெற இருக்கிறது. இதற்கான பயிற்சியை அனைத்து அணிகளுக்கும் முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்மாத துவக்கத்திலேயே ஆரம்பித்தது. கடந்த ஆண்டு ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணி இம்முறை தங்களது பலத்தை நிரூபிக்க ஆயத்தமாகி வருகிறது.

cskvssrh

மேலும் சென்னை அணியில் புது வீரர்கள் பலர் வாங்கப்பட்டுள்ளனர். அப்படி வாங்கப்பட்ட ஒரு வீரரான இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் மொயின் அலி இந்த தொடர் குறித்தும் தோனியின் கீழ் விளையாடுவது குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் :

- Advertisement -

தோனியின் கேப்டன்சியின் கீழ் விளையாடிய வீரர்களிடம் பேசியபோது அவர்கள் தோனியிடம் இருந்து சில விடயங்களை கற்றுக் கொண்டு அதை எவ்வாறு மேம்படுத்தி முன்னேறியிருக்கின்றனர் என்பது தெரியவந்தது. டோனியின் கீழ் விளையாட வேண்டும் என்பது அனைவரது ஆசையாகவும் இருக்கிறது. அதை பார்க்கும் போது எனக்கே வியப்பாக இருக்கிறது.

moeen ali

மேலும் டோனி இதனால்தான் அனைவரும் விரும்பும் கேப்டனாக இருக்கிறார் என்பதற்கு இது சான்று என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : மற்ற அணிகளில் இருந்து சிஎஸ்கே வேறுபடுவதற்கு காரணம் தோனியும், அவரின் தலைமையில் கீழிருக்கும் அணியும் தான். இந்த அணிக்காக விளையாடும் போது எதார்த்தத்தை உணரமுடிகிறது. சிஎஸ்கே வீரர்களுக்கு அழுத்தம் எதுவும் உண்டு பண்ணுவது கிடையாது.

Moeen ali 1

சிறந்த பயிற்சியாளர், சிறந்த கேப்டன் என அதிர்ஷ்டசாலி அணியாக நான் இதை கருதுகிறேன் என மொயின் அலி பேசியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 14வது சீசனுக்கான ஏலத்தில் மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் புஜாரா ஆகியோரை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement