பேட்டிங்கில் அசத்தினாலும்.. முக்கியமான விடயத்துல கோட்டை விட்டுட்டாரு.. ஜடேஜாவை விமர்சித்த – மொயின் அலி

Moeen Ali
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜடேஜா இதுவரை ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடி நான்கு அரை சதங்களை அடித்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக தொடர்ச்சியாக நான்கு அரைசதங்களை அடித்துள்ள ஜடேஜா லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

ரவீந்திர ஜடேஜா இந்த விடயத்தில் கோட்டை விட்டுட்டாரு : மொயின் அலி விமர்சனம்

அண்மையில் நடைபெற்று முடிந்த இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் அடித்தால் என்று வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணிக்கு தூணாக நின்ற ஜடேஜா 181 பந்துகளை சந்தித்து 61 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை இந்திய அணியின் வெற்றிக்காக போராடியிருந்தார். அவரது இந்த அற்புதமான இன்னிங்ஸ் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.

- Advertisement -

அதோடு ஜடேஜா எவ்வளவு ஸ்பெஷலான வீரர் என்பது குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் அவரை பாராட்டி இருந்தனர். இந்நிலையில் அவரது இந்த செயல்பாடு குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரான மொயின் அலி அவரை விமர்சிக்கும் வகையில் சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

ஜடேஜா இந்த தொடரில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இந்த தொடரில் அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் பந்து வீச்சின் போது அவர் இதுவரை பெரியளவில் விக்கெட்டை வீழ்த்தவில்லை. இந்த தொடரின் மூன்று போட்டியில் விளையாடிய அவர் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

மிகக் கட்டுக்கோப்பாக பந்துகளை வீசினாலும் அவரால் விக்கெட் முடியவில்லை. இப்படி இந்த தொடர் முழுவதுமே அவர் பேட்டிங்கில் அசத்தினாலும் முக்கியமான பந்துவீச்சு துறையில் அவர் தவறிவிட்டார் என்று கருதுகிறேன். தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவை பார்க்க விரும்புகிறேன். ஆனால் யாருக்கு பதிலாக அவர் விளையாடுவார் என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க : பும்ராவால் தள்ளிப்போகும் அர்ஷ்தீப் சிங்கின் அறிமுக வாய்ப்பு.. இப்படியா நடக்கனும் – விவரம் இதோ

ஏனெனில் வாஷிங்டன் சுந்தர் நன்றாக பந்துவீசுகிறார். ஜடேஜா நன்றாக பேட்டிங் செய்கிறார் எனவே குல்தீப் யாதவை இனிவரும் போட்டியிலும் பார்ப்பது கடினம் தான் என்று மொயின் அலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement