இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 9 ஒருநாள் போட்டிகள் மற்றும் 63 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவருக்கு தற்போதைய இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தற்போது அவர் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தள்ளிப்போகும் அர்ஷ்தீப் சிங்கின் அறிமுக வாய்ப்பு :
இதன் காரணமாக 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அவருக்கு அறிமுகமாக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா பணிச்சுமை காரணமாக 5 போட்டிகளில் விளையாட முடியாது என்பதனால் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக அவர் ஓய்வெடுக்கும் இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு தான இரண்டாவது போட்டியின் போது பும்ரா ஓய்வு எடுத்துக் கொண்ட வேளையில் அவருக்கு பதிலாக மாற்றுவீராக பிரசித் கிருஷ்ணாவே அணிக்குள் வந்தார்.
அதன் காரணமாக அர்ஷ்தீப் சிங்குக்கு அந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் மீண்டும் மூன்றாவது போட்டியில் பும்ரா வந்துவிட்டதால் அப்போதும் அவருக்கு அறிமுக வாய்ப்பு தள்ளிப்போனது. இந்நிலையில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்பதனால் நிச்சயம் அர்ஷ்தீப் சிங்குக்கு இந்த இரண்டு போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளதால் அடுத்ததாக நடைபெற இருக்கும் நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதன் காரணமாக அடுத்த போட்டியில் பும்ரா விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக நான்காவது போட்டியிலும் அர்ஷ்தீப் சிங்குக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையே உள்ளது.
இதையும் படிங்க : 3 வருஷமா டீம்ல அவரை சும்மா வச்சிருக்காங்க.. அவருக்கு கம்பீர் தான் பதிலை சொல்லனும் – முன்னாள் வீரர் கேள்வி
இதன் காரணமாக அவரது டெஸ்ட் அறிமுக வாய்ப்பு மீண்டும் ஒருமுறை தள்ளிப்போயுள்ளது. ஒருவேளை பும்ரா ஐந்தாவது போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்பது உறுதியாகவில்லை. முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடர் முழுவதுமே இதுவரை ஏமாற்றம் மட்டுமே கிடைத்திருக்கிறது.



