சி.எஸ்.கே அணியில் 3 ஆவது வீரராக நான் களமிறங்க காரணம் இதுதான். இதுவே எனது வேலை – மொயின் அலி பேட்டி

moeen ali
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 188 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டூபிளெஸ்ஸிஸ் 33 ரன்களையும், ராயுடு 27 ரன்களை குவித்தனர்.

csk vs rr

சென்னை அணி வீரர்கள் யாருமே பெரிய அளவில் ரன்களை குவிக்க வில்லை என்றாலும் களமிறங்கிய அனைவரும் கணிசமான ரன் குவிப்பை வழங்கியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188 ரன்களை குவித்தது அதனை தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி துவக்கத்தில் மனன் வோரா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை அடுத்தடுத்து இழந்த நிலையில் பட்லர் மற்றும் துபே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

இருப்பினும் 12 ஆவது ஓவரில் பட்லர் மற்றும் துபே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த ஓவரை வீசிய ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு ஒரு பெரிய திருப்புமுனையை கொடுத்தார். அதன் பின்னர் வந்த யாரும் பெரிய அளவு ரன் குவிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே குவித்தது இதன் மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்று பெற்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த சென்னை அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி சிஎஸ்கே அணியில் தனது வேலை என்ன என்று பேசுகையில் கூறியதாவது : எனது வேலை மூன்றாவது வீரராக களமிறங்கி முடிந்த அளவுக்கு ரன்களை சேர்த்து கொடுத்து சரியான துவக்கம் கொடுப்பது மட்டும் தான். நான் டாப் ஆர்டரில் வரும்பொழுது விக்கெட் ஈசியாக இருக்காது இருப்பினும் நான் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறேன்.

moeen ali 2

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு பிரிவிலும் அணிக்கு பங்களிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சென்னை அணியில் அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். மேலும் எனக்கு கண்டிப்பாக பவுலிங் கேப்டனிடம் இருந்து வழங்கப்படும் என்பது தெரியும். எனவே அதையும் நான் விரும்பி செய்து வருகிறேன் என மொயின் அலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement