இந்திய அணியின் வீரரான இவருக்கு எப்போதும் எனது அணியில் இடமுண்டு – மொயின் அலி ஓபன்டாக்

Moeen-Ali
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை செப்டம்பர் 2ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த ஜோஸ் பட்லர் அவரது மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதன் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளதால் புதிய துணை கேப்டனாக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மொயின் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

Moeen

- Advertisement -

துணைக்கேப்டன் பதவி ஏற்றதை தொடர்ந்து தற்போது தான் எவ்வாறு செயல்பட போகிறேன் என்பது குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ள மொயின் அலி கூறுகையில் : இங்கிலாந்து அணிக்காக எந்த ஒரு வடிவத்திலும் கேப்டன் பதவியோ அல்லது துணை கேப்டன் பதவியோ கிடைப்பது மிகப்பெரிய கவுரவம். அந்த வகையில் எனக்கு துணை கேப்டன் பதவி கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி. இது ஒரு அற்புதமான தருணம்.

நான் இந்த நான்காவது போட்டியில் சிறப்பாக விளையாட ஆர்வமாக இருக்கிறேன். பட்லர் அணியில் இருந்து வெளியேறி உள்ளதால் தற்போது எனக்கு இந்த பதவி கிடைத்துள்ளது. இதனை நான் சரியாக பயன்படுத்துவேன் என்று மொயின் அலி கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : அஷ்வின் அடுத்த போட்டியில் விளையாடுவது இந்திய அணிக்கு பலம் தான். அவர் உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரர் என்பது நாம் அறிந்ததே.

jadeja

அதேபோன்று என்னைப்பொறுத்தவரை ஜடேஜா ஒரு சிறப்பான வீரர். உலகின் எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்த ஒரு அணியிலும் விளையாடத் தகுதியானவர் அவர். நான் என்னுடைய அணியை தேர்வு செய்தால் நிச்சயம் ஜடேஜாவுக்கு எப்போதும் இடமுண்டு. இந்திய வீரர்களில் அவர் என்னுடைய பேவரைட் வீரர்.

எப்பேர்ப்பட்ட மைதானத்திலும் அவரால் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டையும் செய்யமுடியும் என்று மொயின் அலி ஜடேஜாவை புகழ்ந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement