மொயின் அலியை அதிரடியாக நீக்கிய இங்கிலாந்து அணி. அதற்கு மொயின் அலி எடுத்த முடிவு என்ன தெரியுமா ?

Moeen-Ali

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தற்போது ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

England

இந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலி முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார். மேலும் இரண்டாவது இன்னிங்சில் அவர் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டு இன்னிங்சிலும் அவர் சுழல்பந்து வீச்சாளர் லயன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மேலும் பௌலிங்கும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவர் சிறப்பாக செயல்படவில்லை. முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் வீழ்த்தினார். அவரின் இந்த மோசமான செயல்பாடு காரணமாக இங்கிலாந்து அணி அவரை அடுத்த இரண்டாவது லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கியது.

Moeen

இந்நிலையில் மொயின் அலி தற்போது அதிரடியாக புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அது யாதெனில் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்த மொயின் அலி கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளார். அதன்படி இனி வரும் போட்டிகளில் ஓய்வு எடுத்துக் கொண்டு சில மாதங்களுக்குப் பின்பு அவர் அணியில் இணைவார் என்றும் அவர் விளையாடும் கவுன்டி அணியான வொர்செஸ்டர்ஷைர் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -