பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியிலும் மொயின் அலி நீக்கம். காரணம் என்ன தெரியுமா? – விவரம் இதோ

Moeen
Advertisement

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரில் தடுமாற்றமான துவக்கத்தை சந்தித்துள்ளது என்று கூறலாம். ஏனெனில் இதுவரை இத்தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணியானது இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. எனவே இனிவரும் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை சென்னை அணி குவித்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு தக்கவைக்கும்.

CSK vs PBKS 3

இதன் காரணமாக தற்போது சென்னை அணியானது மும்முரமாக தங்களது செயல்பாட்டினை வெளிப்படுத்தி வருகின்றனர். மும்பை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த லீக் போட்டியை வெற்றிகரமாக முடித்த சென்னை அணியானது இந்த தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் இன்று பஞ்சாப் அணியை எதிர்த்து வான்கடே மைதானத்தில் தற்போது விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ஜடேஜா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 187 ரன்கள் குவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது சென்னை அணி விளையாடி வருகிறது.

moeen ali 2

இந்நிலையில் மும்பை அணிக்கெதிரான போட்டியை தொடர்ந்து இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் மொயின் அலி சென்னை அணியில் இடம் பிடிக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் துவக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்தாலும் 3-வது வீரராக களமிறங்கி அணியின் ரன் ரேட்டை உயர்த்தும் அற்புதமான வீரரான மொயின் அலியை ஏன் களமிறக்கவில்லை என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அதற்கு பதிலாக தற்போது விளக்கம் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஏற்கனவே மும்பை அணிக்கு எதிரான போட்டியை காயம் காரணமாக தவற விட்ட நிலையில் தற்போது அவருக்கு பயிற்சியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியையும் அவர் தவறவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க : தோனி மட்டுமல்ல அவரமாதிரி இன்னொரு டேஞ்சரான பினிஷரும் ஐ.பி.எல் தொடர்ல இருந்தாரு – இர்பான் பதான் ஓபன்டாக்

மேலும் காயம் இன்னும் சில தினங்களில் குணம் அடையும் பட்சத்தில் அவர் விரைவில் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக தற்போது மாற்றுவீரராக மிட்சல் சாண்ட்னர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement