கோலி மாதிரி ஃபிட்னெஸ் இல்லாமையே.. ரோஹித் உலகின் பெஸ்ட் பேட்ஸ்மேனாக இதான் காரணம்.. மொய்ன் அலி

Moeen Ali
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் அவர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜோடியாக ஓய்வு பெற்றனர். அதே போல தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர்கள் விடை பெற்றுள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

அதில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்காத ரோஹித் சர்மா சுமாரான ஃபிட்னஸை கொண்டுள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்த விராட் கோலி இப்போதும் உலகிலேயே மிகச்சிறந்த ஃபிட்னஸ் கொண்ட வீரராக வலம் வருகிறார். எனவே விராட் கோலி இன்னும் சில வருடங்கள் விளையாடியிருக்க வேண்டும் என்று வீரேந்திர சேவாக் போன்ற முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர்.

- Advertisement -

ஃபிட்னெஸ் இல்லாமலேயே:

இந்நிலையில் விராட் கோலிக்கு நிகராக ரோஹித் சர்மா ஃபிட்னஸ் கொண்டிருக்கவில்லை என்று இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி தெரிவித்துள்ளார். இருப்பினும் இயற்கையாகவே சுமூகமாக சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமை ரோஹித் சர்மாவிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதை வைத்து 2019 காலகட்டங்களில் ரோஹித் உலகிலேயே மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி மொய்ன் அலி பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா இயற்கையாக திறமையைப் பரிசாகக் கொண்டவர். அதனால் அவருடைய ஆட்டம் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. இயற்கை என்று நான் சொல்வது என்னவெனில் அவருடைய ஆட்டம் முழுவதும் பார்ப்பதற்கு சுமூகமாக இருக்கும். அவர் டாப் பிளேயராக இருந்தார்”

- Advertisement -

மொய்ன் அலி பாராட்டு:

“ஒரு கட்டத்தில் அவர் உலகிலேயே இயற்கையாக மிகவும் திறமை வாய்ந்த வீரராக விளையாடிய காலம் இருந்தது. குறிப்பாக விராட் கோலி போல அவர் ஃபிட்னஸ் லெவலில் அவர் அதிக வேலை செய்யவில்லை. ஆனால் உச்சகட்ட ஃபிட்னஸ் இல்லாமலேயே அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. அவரால் பந்தை நீண்ட தூரம் தூக்கி அடிக்க முடிந்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் அமைச்சரின் சவகாசமே வேணாம்.. அடுத்தடுத்த 2 ஆசிய கோப்பையை புறக்கணிக்கும் இந்தியா

அவர் கூறுவது போல விராட் கோலி போல ரோகித் சர்மா எப்போதும் உச்சகட்ட ஃபிட்னஸை கொண்டிருக்கவில்லை. அதையும் தாண்டி ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ள அவர் 2019 உலகக் கோப்பையில் மட்டும் 5 சதங்களை அடித்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராகவும் ரோஹித் சர்மா உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement