பாகிஸ்தான் அமைச்சரின் சவகாசமே வேணாம்.. அடுத்தடுத்த 2 ஆசிய கோப்பையை புறக்கணிக்கும் இந்தியா

IND vs PAK
- Advertisement -

இந்தியா – பாகிஸ்தான் இடையே சமீபத்தில் எல்லையில் பதற்றம் நிலவியது. எல்லைப் பிரச்சனை காரணமாக 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை நிறுத்தியுள்ள இந்தியா 2012க்குப்பின் இருதரப்பு தொடர்களில் மோதுவதையும் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பொதுவான இடங்களில் மட்டுமே விளையாடி வருகிறது.

அப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அதனால் சிந்து நதியில் தண்ணீர் வழங்குவதை நிறுத்தியது முதல் யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்தது வரை பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்தது. அதோடு நிற்காத இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் மேலே பதில் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது.

- Advertisement -

பாகிஸ்தான் சகவாசம் வேணாம்:

அதற்கிடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2025 ஐபிஎல் தொடர் இந்தியாவில் தற்போது மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் ஜூன் மாதம் இலங்கையில் வளர்ந்து வரும் வீராங்கனைகளுக்கான 2025 மகளிர் ஆசியக் கோப்பை நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் இந்தியா விளையாடப் போவதில்லை என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பிசிசிஐ தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதே போல செப்டம்பர் மாதம் இந்தியாவில் 2025 ஆடவர் சீனியர் ஆசியக் கோப்பை நடைபெற உள்ளது. அந்தக் தொடரையும் தாங்கள் இந்தியாவில் நடத்தப் போவதில்லை என்று ஆசிய கவுன்சிலிடம் பிசிசிஐ தெளிவாக தெரிவித்து விட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் என்னவெனில் கடந்த வருடம் வரை ஆசிய கவுன்சில் தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா இருந்து வந்தார்.

- Advertisement -

வெளியேறும் இந்தியா:

தற்போது அவர் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக சுழற்சி முறையில் பாகிஸ்தான் வாரியத்தின் தலைவர் மற்றும் பாகிஸ்தான் அரசு அமைச்சர் மோசின் நக்வி தற்போது ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கிறார். எனவே அவரது தலைமையில் ஆசிய கோப்பை தொடரில் விளையாட விரும்பாத இந்தியா அதிலிருந்து வெளியேற முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: விராட் கோலி ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டாரு.. நிச்சயம் அவர் இதை செய்ஞ்சிருக்கனும் – வீரேந்திர சேவாக்

இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு. “இந்திய அணி பாகிஸ்தான் அமைச்சர் தலைவராக இருக்கும் ஆசிய கவுன்சில் நடத்தும் தொடரில் விளையாடாது. இது இந்திய தேசத்தின் சென்டிமென்டாகும். வளரும் மகளிர் ஆசிய கோப்பையிலிருந்து வெளியேறுவது பற்றியும் ஆசிய கவுன்சிலை தொடர்பு கொண்டு தெரிவித்து விட்டோம். வருங்காலங்களில் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா விளையாடுவது தற்காலிகமாக பிடித்து வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் தொடர்ச்சியான தொடர்பில் இருக்கிறோம்” என்று கூறினார்.

Advertisement