பாகிஸ்தான் அணி சமீப காலங்களாகவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தடுமாற்றமாக விளையாடி வருகிறது. பொதுவாக இந்தியா சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என தரமான பேட்ஸ்மேன்களை உருவாக்கும் நாடாக இருந்து வருகிறது. அதே போல பாகிஸ்தான் வாசிம் அக்ரம், இம்ரான் கான், வகார் யூனிஸ், சோயப் அக்தர் போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கும் நாடாக கருதப்படுகிறது.
அந்த வரிசையில் தற்சமயத்தில் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப், நாசீம் ஷா ஆகியோர் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார்கள். அவர்களால் உலகிலேயே பாகிஸ்தான் சிறந்த வேகப்பந்து வீச்சு அட்டாக்கை கொண்டிருப்பதாக அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் 2022 காலகட்டங்களில் பெருமை பேசினார்கள். ஆனால் 2022 டி20 உலகக் கோப்பையில் ஹரிஷ் ஃரவூபை அடித்து நொறுக்கிய விராட் கோலி மறக்க முடியாத சிக்ஸரை பறக்க விட்டு பாகிஸ்தானை தோற்கடித்தார்.
ஆகாய சூறர்கள்லாம் கிடையாது:
2023 ஆசியக் கோப்பையில் அந்த 3 பவுலர்களை அடித்து நொறுக்கிய இந்தியா அபார வெற்றி பெற்றது. அப்படியே 2023 உலகக் கோப்பையில் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூபை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சூறையாடி பாகிஸ்தானை தோற்கடித்தார். 2024 டி20 உலகக் கோப்பையில் அந்த பவுலர்களால் அமெரிக்காவிடம் சந்திக்க வேண்டிய அவமானத் தோல்வியிலிருந்து பாகிஸ்தானை காப்பாற்ற முடியவில்லை.
அவை அனைத்தையும் தாண்டி சொந்த மண்ணில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அவர்களால் அரையிறுதிக்கு கூட அழைத்துச் செல்ல முடியவில்லை. இந்நிலையில் தங்களிடம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதாக பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் நினைப்பதாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையிலேயே அவர்கள் சிறந்தவர்கள் கிடையாது என்று மொய்ன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
பெஸ்ட் கிடையாது:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானில் உள்ள மக்கள் பாகிஸ்தான் அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் நான் அப்படியில்லை. அவர்கள் நல்ல பவுலர்கள். ஆனால் அவர்கள் சிறந்தவர்கள் அல்ல. நாசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் ஆகியோர் நல்ல பவுலர்கள்”
இதையும் படிங்க: மீடியம் பேஸ்.. ஆசையா இருந்தாலும் இந்த காரணத்தால் டெஸ்டில் என்னோட பௌலிங் செட்டாகாது.. வருண் பேட்டி
“இப்படி சொல்வதற்காக என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்களை நான் மோசமானவர்கள் என்று அழைக்கவில்லை. ஆனால் அவர்கள் தற்சமயத்தில் உலகின் சிறந்த பவுலர்கள் கிடையாது” எனக் கூறினார். அப்படி சுமாரான இருப்பதாலேயே இங்கிலாந்தின் ஹண்ட்ரட் பாகிஸ்தானை சேர்ந்த எந்த பவுலர்களும் விலைப் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



