சென்னை அணிக்காக தக்கவைத்தது குறித்து மொயின் அலி சொன்ன பதில் என்ன தெரியுமா? – விவரம் இதோ

moeen ali
- Advertisement -

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 15-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட நம்பர் 30ஆம் தேதி அறிவிக்க கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தனர்.
அதன்படி நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி தங்களது அணியில் தக்க வைத்துள்ள 4 வீரர்கள் குறித்த விவரங்களையும் தெளிவாக வெளியிட்டிருந்தது.

csk

அதன்படி சி.எஸ்.கே அணியின் முதல் வீரராக ஜடேஜா 16 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து கேப்டன் தோனி 12 கோடி ரூபாய்க்கும், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி 8 கோடி ரூபாய்க்கும், இந்திய அணியின் இளம் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 6 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

சென்னை அணியின் முக்கிய வீரர்களான பிராவோ, டூபிளெஸ்ஸிஸ், தீபக் சஹர், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, ஷர்துல் தாகூர் ஆகியோர் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். இந்நிலையில் மொயின் அலி 3-வது வீரராக சென்னை அணியில் தக்க வைக்கப் பட்டது குறித்து பேசியுள்ள சென்னை அணியின் மூத்த நிர்வாகி காசி விஸ்வநாதன் கூறுகையில் : மொயின் அலியை நாங்கள் முதலில் தொடர்பு கொண்டு பேசிய போதே அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாட தான் முழு மனதோடு இருப்பதாக முழு சம்மதம் தெரிவித்துவிட்டார்.

மேலும் தன்னை முதல் நபராக தேர்வு செய்தாலும் சரி, கடைசி வீரராக தேர்வு செய்தாலும் சரி அணியில் தக்க வைத்தால் போதும் அதை பற்றி எந்த கவலையும் இல்லை. நான் எந்த தொகைக்கு தக்க வைக்கப் பட்டாலும் சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்றும் மொயின் அலி மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தனக்கு வேறு எந்த அணியிலும் விளையாட ஐடியா கிடையாது என்றும் சென்னை அணிக்காக விளையாட நான் தாராளமாக முன் வருகிறேன் என்று தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : டெஸ்ட் தரவரிசை : டாப் 10ல் 2 ஆம் இடம் பிடித்தது மட்டுமின்றி வித்தியாசமான பவுலராக திகழும் – தமிழக வீரர் அஷ்வின்

இதன் காரணமாக நாங்களும் அவருக்கு அதிக முன்னுரிமை கொடுக்க 3வது வீரராக தக்கவைத்தோம். இனிவரும் காலங்களிலும் மொயின் அலி சென்னை அணிக்காக முக்கிய வீரராக விளையாடுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று காசி விஸ்வநாதன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement